படித்ததில் பிடித்தது

மார்ச் 30, 2012

கேள்வி1 :

உங்களுக்கு தெரிந்த பெண் ஒருத்தி கர்ப்பமுற்ற நிலையில் இருக்கிறாள்.
ஏற்கனவே எட்டுக் குழந்தைகளைப் பெற்ற அவள் இப்போது ஒன்பதாவது
தடவையாக மற்றொரு கருவைச் சுமக்கிறாள். ஏற்கனவே அவள் பெற்ற
எட்டுக் குழந்தைகளில் மூன்று குழந்தைகள் செவிடு, இரண்டு
குழந்தைகளுக்கு கண்பார்வை கிடையாது, மற்றொரு குழந்தையோ மன
வளச்சி குன்றியது. கர்ப்பமுற்றிருக்கிற பெண்கூட பக்கவாத நோயின்
தாக்கத்தால் இருக்கிறாள். இத்தனை பிரச்சனைகள் உடைய இந்தப்
பெண்ணின் கர்ப்பத்தை நீங்கள் கலைக்கச் சொல்வீர்களா?
*இதன் பதிலை மனதில் இருத்தியபடி அடுத்த கேள்விக்கு வாருங்கள்*

கேள்வி2:

ஒரு உலகத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இது!!
உங்கள் வாக்குகளில் மட்டுமே இந்த தேர்வு சாத்தியமாகிறது என்று
வைத்துக் கொள்ளுங்கள். மூன்று வேட்பாளர்கள் இதற்கு
போட்டியிடுகிறார்கள் போட்டியிடும் அபேட்சகர்கள் பற்றி தரப்படும்
குறிப்புகளை வைத்து சரியான ஒருவரை தெரிவு செய்யுங்கள்.

முதலாவது வேட்பாளார்

ஊழல் நிறைந்த அரசியல் வாதிகளோடு கூட்டு வைத்திருப்பவர்.
எப்போதும் சோதிடர்களை நம்புறவர். இவருக்கு இரண்டு மனைவிமார்,
அதுமட்டுமல்ல மிக அதிகமாக புகைப்பவரும் குடிப்பவரும் கூட.

இரண்டாம் வேட்பாளர்

அதிகார பீடத்திலிருந்து இரண்டு தடவைகள் துரத்தியடிக்கப்பட்டார்.
படித்தகாலத்தில் ஓப்பியம் என்ற போதையில் இருக்கும் பழக்கம் உண்டு.

மூன்றாம் வேட்பாளர்

நாட்டுக்காக போர்க்களம் புகுந்து கெளரவம் பெற்ற வீரர்.என்றுமே மாமிசம்
உண்ணாதவர்.அது மட்டுமல்ல புகை பிடிப்பதோ மதுபானம் அருந்துவதோ கூட கிடையாது.
எப்போதாவது கொஞ்சம் பியர் குடிப்பதுண்டு,எந்தப் பெண்ணையும் எப்போதும் இவர்
ஏமாற்றியது கிடையாது.

இரண்டுகேள்விகளுக்குமான விடைகள்

இந்த மூன்று பேரில் யாரை தெரிவு செய்யப் போகிறீர்கள்?

நீங்க யாரை தெரிவு செய்தீர்கள் என்பதற்க்கு முன்னர் ஒரு விடயம்
குறிப்புகள் தரப்பட்ட அந்த மூன்றூ பேரும் உலகப் போரின் நாயகர்கள்.

*முதலாம் வேட்பாளர் பிராங்கிளின் டீ ரூஸ்வெல்ற், இரண்டாவது நபர்*

*உலகப் போரின் பிரித்தானியப் பிரதமர் வின்சன்ற் சர்ச்சில். நீங்கள் *

*மூன்றாவது நபரை தெரிவு செய்திருந்தால் அவர் வேறு யாருமல்ல*

*சர்வதிகாரி அடல்ப் ஹிட்லர்தான் அவர்*

கருக் கலைப்பு

*சரி இனி முதலாவது கேள்வியான கருக் கலைப்பு விடயத்திற்கு வரலாம்*
*அந்தபெண் கருவை கலைக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால்*
*உலகின் மாபெரும் இசைமேதை பீத்தோவனை நீங்கள் கொன்று *
*விட்டீர்கள் என்று அர்த்தம்!!!!!!!!!!!!!!*

சரியான தீர்வுகள் எல்லாச் சந்தப்பத்திலும் நியாயமானவை அல்ல!!!!!!!!


நீ நான் காதல் . . .

December 12, 2011

ஏதேதோ பேசிவிட எண்ணி
எதுவும் பேசாமல்
அமர்ந்திருக்கிறேன் . . .

ஊமையாக வாழவும் சம்மதம்
நாளெல்லாம் காதல்மொழி
நீ பேசினால் . . .


நீ இல்லாத நான்…

December 8, 2011

வழிப்போக்கனை போல

விழியிலே மேய்ந்து

என்னைக் கடந்து போகும் நொடியில்

உன் நினைவுகளை

அவசரமாய் ஆழமாய் சேமித்துக் கொள்கிறேன்

எனக்குப் பிடித்த உன்னை இனி

யார் கரம் பிடித்தாலும்

அழிக்க முடியாத

உன் நினைவுகளுடன்…

சிவா…


முத்தம் சிந்தும் நேரம்!

December 7, 2011

அவசர அவசரமாய்
நீ பறக்க விட்டுச் செல்லும்
ஒற்றை முத்தத்திற்காக
இரு கன்னங்களும் சண்டையிட
வெற்றிப் பெருமிதத்தில்
புன்னகைக்கின்றன
திருட்டுத்தனமாய்
அபகரித்துக் கொண்ட இதழ்கள்!

:-x :-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x

அழகிய சங்கீதம் போல்
வண்டுகள் ரீங்காரமிடும்
ஒரு ரம்மியமான இரவில்
காமத்தின் நெடியினூடே
சுகந்தமாய் மணம்
பரப்பி செல்கிறது நீ
காதலுடன் நெற்றியில் தந்த
ஒற்றை முத்தம்!

:-x :-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x:-x

முதல் முத்தம் பற்றிய பேச்சில்
உரிமைதான் என்றாலும்
ஏதோ தவறு செய்வது போல்
படபடத்த இதயம் தான்
நினைவில் உள்ளது என்று
முடிப்பதற்குள் முத்தமிட்டு
கிறங்கியிருக்கும் என்னை
தட்டி எழுப்பி சிரிக்கிறாய்
அந்த முதல் முத்ததின் தித்திப்பை
என் இதயக் கூட்டில்
பதுக்கி வைத்திருப்பதை அறியாமல்…


இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்….

நவம்பர் 30, 2011

இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்….

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா…

6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க…?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…?

9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க…?

10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனு சொல்றீங்க…?

ஏன் சார் ஏன்….

இத்த தான்…

திருக்குறள்ள

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்…

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது..


விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்

அக்டோபர் 1, 2011

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தி வருகின்றனர்.
எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளன.
1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டர்களை, டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் போல்டரில், மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து, அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.
2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில், எளிதாக அதில் வேலை செய்திட, இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்தி டவும்.
3. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம், மிகத் தெளிவான, துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, இந்த வசதி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம்; அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.
4. டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது, கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க, சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம். எடுத்துக்காட்டாக, முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.
5. டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி, அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள, விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.
6. ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கம்ப்யூட்டரிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால், பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ, அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தரும் புதிய கூடுதல் வசதிகள் இன்னும் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்து கொள்வதனாலேயே இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது ஈர்க்கப்பட்டு பலர் இதற்கு மாறி வருகின்றனர். தொடர்ந்து இவற்றைத் தெரிந்து கொள்வோம்.


இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு

செப்டம்பர் 27, 2011

(Discovery of A Planet Orbiting Two Suns)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

ஒற்றைப் பரிதியைச்
சுற்றிவரும் நமது
பண்டைக் கோள்கள் !
விண்வெளியில் இப்போது
இரட்டைப் பரிதிகள் சுற்றும்
சுற்றுக்கோள் ஒன்றைக்
கண்டு பிடித்தார்
அண்ட வெளியில் !
சுற்றுக் கோளின் மாலை
அந்திப் பொழுதில் இரு பரிதிகள்
அடுத்தடுத்து அத்த மிக்கும்
விந்தை நிகழும்
தொடு வானிலே !
நேற்று
நியூட்ரான் விண்மீனைச்
சுற்றி வரும்
வைரக்கோள் ஒன்றைக்
கண்டு பிடித்தார் !
புதுவிதக் கோள்களைத் தேடிப்
போகும் நாசா கெப்ளர்
விண்ணோக்கி !
கண்ணுக்குத் தெரியாமல்
வேற்று முறையில் விந்தைக் கோள்கள்
விளையாடிக் கொண்டி ருக்கும்
நூற்றுக் கணக்கில் !

“இந்த இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள் அமைப்பாடு மிக்கக் கவர்ச்சி ஊட்டுவது ! இரண்டு பரிதிகள் குறுக்கிடும் கோள் ஆக மூன்று அகிலக் கோளங்கள் ஒன்றை ஒன்று மறைத்து வருவது (Solar Eclipses) விண்வெளியில் மகத்தான காட்சி !”

லாரென்ஸ் டாயில் (அகிலவெளி விண்மீன் உயிரியல் ஆய்வக விஞ்ஞானி)

“கெப்ளர் விண்ணோக்கியின் உன்னத துல்லிய கணிப்பு இது. இதில் மெய்யான புல்லரிப்பு ஊட்டுவது எங்களுக்கு : இரட்டைப் பரிதிகளை ஓர் அண்டக்கோள் சுற்றி வருவது !”

அலன் பாஸ் (கார்னகி விஞ்ஞானக் கழகம், வாஷிங்டன். டி.சி.)

“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

“பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech's Michelson Science Center]

“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா? அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன? அந்த வாயுக் கலவையில் நீர்மை ஆவி [Water Vapour] உள்ளதா ? அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள் ளனவா? நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது ! சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது ! மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !”

மிசியோ காக்கு (Michio Kaku, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

இரண்டு சூரியன்களைச் சுற்றிவரும் ஓர் அண்டக்கோள் கண்டுபிடிப்பு

2011 செப்டம்பர் 15 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி வானியல் குழுவினர் முதன் முறை யாக இரு பரிதிகளைச் சுற்றிவரும் ஒரு கோளைக் கண்டிருப்பதை மெய்ப்பித்து விட்டதாக அறிவித்தார். கெப்ளர் விண்ணோக்கி நோக்கிய அந்தக் விந்தைக் கோளின் பெயர் : கெப்ளர் -16பி (Kepler -16b). அந்தப் புதிய கோள் நமது பூமியிலிருந்து 220 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகத் தெரிகிறது. பெரிய பரிதி ஒன்றை மையமாய் வைத்துச் சுற்றும் ஒரு சிறிய பரிதியின் ஏற்பாடு இது. இவை “இரண்டை விண்மீன்கள்” (Binary Stars) வகுப்பு வகையைச் சேர்ந்தவை. இந்த இரட்டை விண்மீன் களைச் சுற்றிவரும் கோளுக்கு “இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள்” (Circumbinary Planet) என்று பெயர் அளிக்கப் பட்டுள்ளது, அதாவது கெப்ளர் -16பி இன் அந்திவானில் மாலைப் பொழுது மங்கி மறையும் போது இரு பரிதிகள் அடுத்தடுத்து அத்தமிக்கும் விந்தை நிகழும் !

நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி விண்வெளியில் 2009 இல் ஏவப்பட்டது. அதன் முக்கியக் குறிக்கோள் நமது பால்வீதி ஒளிமந்தையில் ஒளிந்து கொண்டுள்ள பூமியைப் போன்ற கோள்களைக் கண்டுபிடிப்பது. கெப்ளர் -16பி சுற்றிவரும் பரிதிகளில் பெரியது நமது சூரியன் போல் ஒப்பளவில் 69% பரிமாணம் உடையது. சிறிய பரிதி நமது சூரியன் போல் ஒப்பளவில் 20% பரிமாணம் உடையது. கெப்ளர் -16பி சுற்றுகோளின் தள உஷ்ணம் : (-73C முதல் -101C வரை) (-100F முதல் -150F வரை). இரட்டைப் பரிதிகளை ஒருமுறை சுற்ற கோளுக்கு 229 புவிநாட்கள் (Earth days) எடுப்பதைக் கெப்ளர் கணித்தது. மையப் பரிதியிலிருந்து சுற்றும் தொலைத் தூரம் சுமார் 65 மில்லியன் மைல் (104 மில்லியன் கி.மீடர்). அந்தத் தூரம் நமது பரிதியை வெள்ளிக் கோள் (Venus) சுற்றும் தூரத்துக்கு நிகரானது

கெப்ளர் விண்ணோக்கிச் சுற்றுக்கோளை எப்படிக் கண்டுபிடித்தது ?

விண்வெளியில் மின்னும் ஒரு பரிதிக்கும் கெப்ளர் விண்ணோக்கிக்கும் இடையில் ஓர் அண்டக்கோள் குறுக்கிடும் போது சீராக ஒளி மங்கியும் பிறகு பொங்கியும் திரும்பத் திரும்ப வருவதால் பரிதிக்கு அருகில் கோளின் நகர்ச்சி நிச்சயமாகிறது. இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு பரிதி அடுத்த பரிதியைக் குறுக்கிடும் போதும் ஒளி மங்குவதும் மீள்வதும் காணப்பட்டது. மாற்றி மாற்றி இரண்டு பரிதிகளின் ஒளியும் ஓர் ஒழுங்குக் கால நேரத்தில் மங்கலானதை நாசா விஞ்ஞானிகள் கண்டனர். இரட்டைப் பரிதிகளின் சுற்றையும், குறுக்கிடும் கோளின் இருப்பையும் விஞ்ஞானிகள் நிரூபித்தார். கெப்ளர் விண்ணோக்கி இந்தப் புதிய கண்டுபிடிப்பை நோக்கியது மட்டும் இல்லாமல் பரிதிகளின் நிறை, ஆரம், பாதை, சுற்றும் காலம் ஆகியவற்றையும், கோளின் நிறை, ஆரம், சுற்றுக் காலத்தையும் துல்லியமாகக் கணித்தது. மையப் பரிதிச் சுற்றும் சிறிய பரிதி “செங்குள்ளி” (Red Dwarf) இனத்தைச் சேர்ந்தது. விண்மீன் கூட்டத்தில் செங்குள்ளி தளர்ச்சியுற்று மங்கிப் போன ஒரு சிறு விண்மீன்

நாசா கெப்ளர் விண்ணோக்கியை ஏவியிருப்பதின் முக்கியக் குறிக்கோள் பூமியைப் போன்ற நீர்க்கோள்கள் பிரபஞ்ச வெளியில் வேறு சூரியன்களைச் சுற்றி வருகின்றனவா என்பதைக் காண்பதற்கே. இதுவரை (2011 செப்டம்பர் 19) விண்ணோக்கி 150,000 விண்மீன்களின் ஒளித் திணிவை உற்று நோக்கி வந்துள்ளது. விண்மீன் ஒளித் திணிவில் ஒளிமங்கல், ஒளிமீட்சி நிகழ்ந்து சுற்றுக்கோள் ஒன்று குறுக்கிடுகிறதா வென்று கெப்ளர் விண்ணோக்கி சோதிக்கிறது. இதுவரை 563 சூரிய ஏற்பாட்டில் ஒற்றைப் பரிதியைச் சுற்றும் 685 அண்டவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !

தகவல் :

Picture Credit : NASA Space Center

1. Astronomy Today Chaisson & McMillan (1999)

2. Reader’s Digest – The Universe & How We See It By : Giles Sparrow (2001)

3. Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)

4. Lightnet : Planet Orbiting Two Suns ? (November 5, 1999)

5. Space Daily : Latest Exoplanet Haul Includes Super Earth At Habitat Zone Edge, Geneva Austria (September 13, 2011)

6. UCSB Scientist Contributes to First Discovery of a Planet orbiting Two Suns (University of California Santa Barbara) (September 16, 2011)

7. BBC News : NASA’s Kepler Telescope Finds Planet Orbiting Two Suns (September 15, 2011)

8 Los Angeles Times : Scientists Find Planet Orbiting Two Suns Like in “Star Wars” (September 16, 2011)
9. Wikipedia : Extrasolar planets (September 19, 2011)

10. Space Daily : Astronomers Confirm First Planet orbiting Two Suns (September 19, 2011)

11 Wikipedia : http://en.wikipedia.org/wiki/Kepler-16b Kepler-16b Planet (September 19, 2011)

12. Wikipedia : http://en.wikipedia.org/wiki/Circumbinary_planet (September 19, 2011)

++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) (September 20, 2011)


விண் ஆம்ப் புதிய பதிப்பு Winamp New Version

ஆகஸ்ட் 26, 2011

விண் ஆம்ப் புரோகிராம் ஆடியோ மற்றும் வீடியோ பயன்பாட்டிற்கு, அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மைக் ரோசாப்ட் விண்டோஸ் இயக்கத்துடன் தரும், விண்டோஸ் மீடியா பிளேயர், சில பார்மட்டுகளை இயக்குவதற்குத் தயாராக இல்லை. வி.எல்.சி. பிளேயர் இந்தக் குறையினைத் தீர்த்தாலும், பலவகையான வசதிகளைத் தருவதால், இன்றும் விண் ஆம்ப் புரோகிராம் பலரின் ஆடியோ வீடியோ தேவைகளை நிறைவேற்றும் புரோகிராமாக உள்ளது. எடுத்துக் காட்டாக மியூசிக் பைல் என எடுத்துக் கொண்டால், விண் ஆம்ப் MIDI, MOD, MPEG1 ஆடியோ லேயர்கள் 1 மற்றும் 2, AAC, M4A, FLAC, WAV, OGG Vorbis, மற்றும் Windows Media Audio ஆகிய வற்றை இயக்குகிறது. இத்துடன், மியூசிக் சிடியிலிருந்து, இசையை இறக்கி இயக்கிச் செயல்படுகிறது. சிடிக்களில் மியூசிக் பைல்களை எழுதும் வசதி இதில் உள்ளதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
வீடியோ என்று வருகையில், பல்வகையான பார்மட்டுகளை இதில் கையாளலாம். Windows Media Video and Nullsoft Streaming Video ஆகியவற்றை இயக்குகிறது. Windows Media Player. 5.1 இயக்கும் அனைத்தும் இதிலும் இயக்கப்படுகிறது. பார்மட்டுகள் வழி விட்டால், சரவுண்ட் ஸ்டீரீயோ இதில் கிடைக்கிறது.
தொடர் ஒலியான, ஸ்ட்ரீமிங் வீடியோ என்று வருகையில், இன்டர்நெட் ரேடியோ, இன்டர்நெட் டெலிவிஷன், எக்ஸ்.எம். சாடலைட் ரேடியோ, பாட்காஸ்ட், ஆர்.எஸ்.எஸ்.பீட்ஸ் என அனைத்தையும் செயல்படுத்துகிறது. இவற்றுடன் விண் ஆம்ப் இணைய தளத்தில் உள்ள பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இதன் மதிப்பை அதிகப்படுத்துகின்றன.
இந்த விண் ஆம்ப் புரோகிராமின் புதிய பதிப்பாக விண் ஆம்ப் 5.621 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதியதாக, ஐ-ட்யூன்ஸ் லைப்ரேரியிலிருந்து இதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டாஸ்க் பாரில் வைத்து இயக்கும் வகையில் வசதி தரப்பட்டுள்ளது. பிளே லிஸ்ட் உருவாக்கத்தில் புதிய வழிகள் இணைக் கப்பட்டு மேம்படுத்தப் பட்டுள்ளன. தேவைப்பட்டால், உங்கள் பிரவுசருக்கான விண் ஆம்ப் டூல் பாரினை இணைத்துக் கொள்ளலாம்.
இசைக்கான மற்ற புரோகிராம்கள், சில வசதிகளை அளித்து, தேவைப்பட்டால் எடுத்துக் கொள்; இல்லை என்றால் விட்டுவிடு என்ற போக்கில் இயங்கு கின்றன. விண் ஆம்ப் அப்படி இல்லை; நம் தேவைகளுக்கேற்ப இதனை வயப்படுத்திக் கொள்ளலாம். ஆடியோ, வீடியோ மற்றும் ஸ்ட்ரீமிங் வீடியோக் களை, நம் விருப்பத்திற்கேற்ப வகைப்படுத்திக் கொள்ள வழிகள் மற்றும் ஆப்ஷன்கள் தரப்படுகின்றன. ஏறத்தாழ 60 ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டு களை இதில் கையாளலாம். ஸ்கின், ப்ளக் இன் மற்றும் ஆன்லைன் சர்வீஸ் என ஏறத்தாழ 6,000 ஆட் ஆன் புரோகிராம்கள் கிடைக்கின்றன.
SHOUTcast ரேடியோ டைரக்டரியுடன் இணைந்து, ஏறத்தாழ 40,000 ரேடியோ ஸ்டேஷன்களை இதில் இயக்கிக் கேட்கலாம். பன்னாட்டளவில் இசையை ரசிப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வசதியாகும். தொலைக்காட்சி ஒளிபரப்புகளையும் கண்டுகளிக்கலாம்.
புதிய விண் ஆம்ப் பதிப்பைப் பெற http://www.winamp.com/mediaplayer என்ற முகவரிக்குச் சென்று, தரவிறக்கம் செய்து, எளிதில் இன்ஸ்டால் செய்து பயன் பெறவும்.


காலம் மாறுகிறது

ஜூலை 26, 2011

பொதுவாக பிரவுசர் பயன்பாட்டில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பயன்பாடு தொடர்ந்து குறைந்து வருவதனை நாம், இது குறித்து ஆய்வு செய்திடும் அமைப்புகளின் தகவல் களைக் கொண்டு குறிப்பிட்டுள்ளோம். சென்ற ஜூன் மாதத்தில் மேற்கொண்ட பிரவுசர் பயன்பாடு, வேறு சில ருசிகர தகவல்களைத் தந்துள்ளது.
மே மாதம் வரை, பன்னாட்டளவில் 60.32 சதவிகிதப் பயன்பாட்டைக் கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், ஜூன் மாதம் 53.68% ஆகக் குறைந்துள்ளது. இந்த இடத்தில் பயன் பெற்றது எந்த பிரவுசர் என்ற கேள்வி எழுகிறதா? சந்தேகமில்லாமல் குரோம் பிரவுசர் தான். 7.16% ஆக இருந்த இதன் பயன்பாடு 13.11% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த உயர்வுக்கு இணையாக மற்றொரு பிரவுசரின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
சபாரி (Safari) பிரவுசரின் பயன்பாடு 5.09% லிருந்து 7.48% ஆக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் என்ன? உயர்ந்து வரும் ஐ-பேட் பயன்பாடு தான். ஐ-பேட் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், சபாரி பிரவுசரையே பயன்படுத்து கின்றனர். பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துவது 22.91%லிருந்து 21.67% ஆகக் குறைந்துள்ளது.
முதன் முதலாக, உலக அளவில், இணையம் பிரவுஸ் செய்வதில் 1% இடத்தை ஐ-பேட் சாதனம் பெற்றுள்ளது. இது ஒரு தொடக்கம் தான். இனி இது ஜெட் வேகத்தில் உயரும் வாய்ப்பு உள்ளது. ஆம், காலம் மாறுகிறது


கூகுள் முக்கிய அறிவிப்பு

ஜூலை 26, 2011

கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன் படுத்துகிறீர்களா! அப்படியானால், வரும் ஆகஸ்ட் 1 முதல், நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அதன் அண்மைக் காலப் பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால், அதனை கூகுள் சப்போர்ட் செய்திடாது. http:// www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057 என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் மற்றும் சபாரி பிரவுசர்களைக் குறிப்பிட்டே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நடப்பில் எந்த பதிப்பினை இந்த பிரவுசர்கள் கொண்டுள்ளனவோ, அந்த பதிப்பினையும், அதற்கு முந்தைய பதிப்பினையும் மட்டுமே, கூகுள் சப்போர்ட் செய்திடும். இதன்படி, ஆகஸ்ட் 1 முதல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, பயர்பாக்ஸ் 3.5 மற்றும் சபாரி 3 ஆகியவற்றுக்கு சப்போர்ட் கிடைக்காது.
இந்த பழைய பிரவுசர் பதிப்புகள் மூலம் கூகுள் அப்ளிகேஷன்களைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆனால், கூகுள் தரும் புதிய வசதிகளில் சில இதில் கிடைக்காமல் போகலாம். அவை சரியாகச் செயல்படும் என்ற உத்தரவாதத்தினை கூகுள் தராது.
தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கு கூகுள் அப்ளிகேஷன்களுக்குக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வருபவர்களுக்கு இதனை கூகுள் ஏற்கனவே அறிவித்துள்ளது. தங்கள் பிரவுசர்களை அப்கிரேட் செய்திட லிங்க்கினையும் தந்துள்ளது. இந்த பிரவுசர்களைத் தந்துள்ள நிறுவனங்களின் தளங்களிலும் இதே போன்ற அறிவிப்பு தரப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு களுக்குக் காரணம் என்ன? கூகுள் தன் மெயில், காலண்டர், டாக்ஸ் மற்றும் தளங்களில் (Mail, Calendar, Docs and Sites), எச்.டி.எம்.எல்.5 (HTML 5) இஞ்சினைப் பயன்படுத்துகிறது. கூகுள் தரும் பல புதிய வசதிகள் இதன் அடிப்படையில் தான் இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பைல் ஒன்றை அட்டாச் செய்திட, போல்டரி லிருந்து இழுத்து அமைப்பது (drag and drop attachment), படங்களை இதே போல அமைப்பது, புதியதாக மெயில் வந்துள்ளது என்ற அறிவிப்பு வழங்குவது போன்ற பல செயல்பாடுகள், எச்.டி.எம்.எல்.5 அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இவை குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசரின் புதிய பதிப்புகளில் மட்டுமே கிடைக்கின்றன.
இதில் ஒரு மோசமான சூழ்நிலையும் உருவாகி உள்ளது. கூகுள் ஆப்லைன் (Google Offline) வசதி இந்த புதிய பிரவுசர்களில் எடுபடவில்லை. இந்த வசதி பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் வழி தரப்படுகிறது. இவற்றை கூகுள் Google Gears என அழைக்கிறது. தற்போது இந்த வசதி பயர்பாக்ஸ் 3.6 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் கிடைக்கிறது. இந்த பிரவுசர்களின் புதிய பதிப்பினை நீங்கள் பயன்படுத்தினால், இந்த ஆப் லைன் வசதி கிடைக்காது. ஆனால், கூகுள் இந்த விஷயத்தில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. அநேகமாக, இன்னும் இரண்டு மாதங்களில், இந்த ஆப்லைன் வசதியை புதிய பிரவுசர் பதிப்புகளிலும் செயல்படும்படி எச்.டி.எம்.எல்.5 அடிப்படையில் கூகுள் அமைத்துவிடும். தற்போது இந்த ஆப் லைன் வசதி கூகுள் குரோம் பிரவுசரில் கிடைக்கிறது.


Follow

Get every new post delivered to your Inbox.