அவள்

அவளை நான் இரண்டாம் முறையாக பார்க்கிறேன் இப்போதவள் சிரித்துக் கொண்டிருந்தாள் அதற்கென்ன என்கிறீர்களா முதல்முறை பாா்த்தபோது அவள் அழதுகொண்டிருந்தாள். ஏனென்றாள் அவள் கணவன் படுத்துக் கொண்டிருந்தான் இல்லை படுக்க வைக்கபட்டிருந்தான் ஏனெனில் அவன் இறந்திருந்தான்.

அன்றைக்கும் இன்றைக்குமிடையில் 18 நாட்கள் கடந்திருந்தது. எப்படி இது சாத்தியம் உயிரான கணவன் இறந்த 18வது நாளில் சிரிப்பு எப்படி வரும். அன்பு பாசமெல்லாம் ஒருபறம் இருக்கட்டும் தன் வாழ்வு எதிர்காலம் பற்றிய கவலைகள் கூடவா இல்லாதிருக்கும்.

யோசிக்கையில் புரிகிறது என்ன நடந்திருந்தாலும் 3 மணி நேரத்தில் உடல் உபாதை வெளியேற்ற வேண்டியிருக்கும் 6 மணி நேரத்தில் தாகமெடுத்திருக்கும் 24 மணி நேரத்திலாவது பசித்திருக்கும். 2 நாட்களுக்கு பிறகாவது கூந்தலை சரிசெய்ய வேண்டி இருந்திருக்கும். ஒரு வாரத்தில் சோப்பு ஷாம்பு தேவைப் பட்டிருக்கும் தேவையிருக்கோ இல்லையோ டீவியை பார்க்க வேண்டியும் வரும்.

இத்தனைக்கு பிறகு சிரிப்பதில் என்ன இருக்கு மரணம் வலிதான் ஆனால் வாழ்க்கையும் அதன் தேவைகளும் எல்லாவற்றையும் மறக்கடிக்கும். இப்போதும் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள் என் மனதில் நிம்மதி வந்திருந்தது…

பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப்பாதை! -தினமலர்

பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாற்றுப்பாதை திட்டம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி – கோவை வழித்தடத்தில், பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இடைவெளியின்றி தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன. உயர்கல்வி, மருத்துவ தேவைக்கும், தொழில்ரீதியாகவும் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு, இருசக்கர வாகனங்கள், கார் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

பஸ் பயணிகள் கூட்டமும் அதிகரித்துள்ளதால், பஸ் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்து அதிகரித்தாலும், ரோட்டை விரிவுபடுத்தி, தரத்தை மேம்படுத்தாததால் விபத்துகளும், உயிரிழப்பும் அதிரித்து வருகிறது.

நான்குவழிச்சாலை

இந்நிலையில், பொள்ளாச்சி – கோவை வழித்தடத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றியமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் துவங்கியுள்ளது. மொத்தம், 26 கி.மீ., தொலைவுக்கு, 1.2 மீ., அகலத்தில் மையத்தடுப்பும், ரோட்டின் இரு பக்கமும் தலா, 9 மீ., அகலத்தில் கான்கிரீட் ரோடும் அமைக்கப்படுகிறது.

வழித்தடத்தில், 15 இடங்களில் சிறிய பாலங்கள் அமைகிறது.

முள்ளுப்பாடியில் ரயில்வே மேம்பாலம், கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபத்தில் உயர்

மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. இப்பணிகள், 500.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. ரோட்டில், பல இடங்களில் ரோடு முழுமையாக தோண்டப்பட்டுள்ளது.

மேடான பகுதிகள் பள்ளமாகவும், பள்ளமான பகுதிகள் மண் கொட்டப்பட்டு மேடாகவும் மாற்றப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், கோவை ரோட்டில் பயணிப்பது ஆபத்தான பயணமாக உள்ளது.

மாற்றுப்பாதை

கோவைக்கு வேறு மாற்றுப்பாதை வசதி இல்லாததால், பணிகள் நடக்கும் நிலையில் போக்குவரத்தும் அதே ரோட்டில் இயக்கப்படுகிறது. ரோடு முழுவதும் புகை மண்டலமாக மாறி விடுகிறது. பணிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி – கோவை வழித்தடத்துக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாற்று வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாற்று வழித்தட பாதை, தற்போதுள்ள ரோட்டின் நிலை, மேம்படுத்த வேண்டிய பகுதிகள், அதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் கவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவசர அவசியம் கருதியும், கோவை ரோட்டில் நிலவும் நெருக்கடியை கருத்தில் கொண்டும், இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

திட்ட மதிப்பீடு ரூ. 32 கோடி!

மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

திட்டமிடப்பட்டுள்ள மாற்றுப்பாதை பொள்ளாச்சி அடுத்துள்ள கோவில்பாளையத்தில் துவங்குகிறது. கோவில்பாளையம், காளியண்ணன்புதுார், குளத்துப்பாளையம், முள்ளுப்பாடி, பட்டணம், நல்லட்டிபாளையம், கோடங்கிபாளையம், கோதவாடி, கொண்டம்பட்டி, அரசம்பாளையம், மயிலேறிபாளையம் வழியாக செட்டிபாளையத்தை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

வழித்தடத்தில், முள்ளுப்பாடி – காளியண்ணன்புதுார் ரோடு, வலசுபாளையம் – குளத்துபாளையம் ரோடு முதல் முள்ளுப்பாடி – நெகமம் ரோடு வரை, முள்ளுப்பாடி நெகமம் ரோடு – பட்டணம், நல்லடிபாளையம் – பட்டணம் ரோடு, அரசம்பாளையம் – கொண்டம்பட்டி ரோடு, அரசம்பாளையம் – மயிலேறிபாளையம் ரோடு, என, 11.3 கி.மீ.,க்கு யூனியன் ரோடு உள்ளது. மற்ற இடங்களில், நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது.

இத்திட்டத்துக்கு, யூனியன் ரோடுகளை நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். விரிவான திட்ட அறிக்கைக்கு ஏற்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்ததும், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கலாம்.

ரோடு விரிவாக்கத்துக்கு, இடவசதி உள்ளதால், நிலம் எடுப்பு செய்ய வேண்டியதில்லை. பணிகளை துவங்கினால், மூன்று மாதத்தில் நிறைவு செய்யலாம். மொத்தம், 23.7 கி.மீ., தொலைவுக்கு ரோடு விரிவுபடுத்த வேண்டும். அனைத்து ரோடுகளும், 3.75 மீ., உள்ளது; 7 மீ.,க்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகள் அனைத்தும் மேம்படுத்த வேண்டும். இத்திட்டத்துக்கு, 32 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட்

தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக செட்டிபாளையத்துக்கு, 30.8 கி.மீ., தொலைவு செல்ல வேண்டும். மாற்றுப்பாதையில் சென்றால், பொள்ளாச்சி – கோவில்பாளையம் – செட்டிபாளையத்துக்கு, 33.7 கி.மீ., தொலைவு. இதில், 23.7 கி.மீ., தொலைவுக்கு மேம்படுத்த வேண்டும்.

செட்டிபாளையத்தில் இருந்து, வெள்ளலுாரில் கோவை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டுடன் இத்திட்டச்சாலை இணைக்கப்படுகிறது. மேலும், செட்டிபாளையத்தில் இருந்து, ஈச்சனாரி, போத்தனுார், குறிச்சி பகுதிக்கு எளிதாக செல்லலாம்.

செட்டிபாளையம் – நஞ்சுண்டாபுரம் வழியாகவும், செட்டிபாளையம் – சிங்காநல்லுார் வழியாகவும் திருச்சி ரோட்டை அடையலாம். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், கோவை ரோட்டிற்கு மாற்றுப்பாதையாக இருக்கும். கோவை ரோட்டின் கிழக்கு பகுதியிலுள்ள கிராமங்களுக்கு முக்கிய இணைப்பு பாதையாகவும் இருக்கும்.

தின மலர்
24.04.2017

ஈச்சனாரி – மருதமலை புதிய பேருந்து வழித்தட பேருந்து 67A

TNSTC கோவை பகுதியில் இரண்டு புதிய பேருந்துகள் துவக்கப்பட்டுள்ளது.

மருதமலை மற்றும் உக்கடம்-2 பனிமனையில் இருந்து இயக்கப்படுகிறது.

இரண்டு பேருந்துகளும் ஒரே வழித்தடத்தில் ஒரே எண்னுடன் வலம் வருகிறது.

சிறப்பு அம்சங்கள்:-

1. உக்கடம் பனிமனையில் இருந்து மருதமலைக்கு முதல் முறையாக இயக்கப்படும் பேருந்து இதுவே.

2.இந்த பேருந்துகளின் வழித்தடம் கோவை நகர பகுதிகளை தொடாமல் நகருக்கு வெளியே செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

3.இந்த வழித்தடமானது முழுவதும் கிராமபுற பகுதிகளிலேயே அமைந்துள்ளது.

4.பேரூர்-இல் இருந்து மருதமலை-கு நேரடி பேருந்து சேவையாகவும் அமைந்துள்ளது.

5.இந்த பேருந்துகளின் வழித்தடமாக பாரதியார் பல்கலைகழகம், வடவள்ளி, அஜ்ஜனூர், வேடபட்டி, பேரூர், மதுக்கரை மார்கெட் அமைந்துள்ளது.
10347548_947738945255382_5354051329381674929_n

1383296_947738505255426_7845610134440354562_n

ராஜிவ் கொலை வழக்கு: சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினியை விடுதலை செய்ய ஜெயலலிதா உத்தரவு

சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தூக்கு தண்டனை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் மனித குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த 1991–ம் ஆண்டு மே மாதம் 21–ந் தேதி இந்த துயர சம்பவம் நடந்தது. நாட்டை உலுக்கிய இந்த படுகொலை குறித்து சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினார்கள். சென்னை அருகே உள்ள பூந்தமல்லி தடா கோர்ட்டில் நடைபெற்ற கொலை வழக்கு விசாரணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், முருகன் மனைவி நளினி உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற மேல் முறையீட்டு விசாரணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் தமிழக கவர்னர் பாத்திமாபீவி உத்தரவின் பேரில், நளினியின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

சீராய்வு மனு

இந்த நிலையில், தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருடைய கருணை மனுக்கள், 11 ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலால் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து 3 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த 2011–ம் ஆண்டு செப்டம்பர் 9–ந் தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்தது.

இதற்கிடையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட தங்களுடைய கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்ததாலும், ஏற்கனவே 23 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இருப்பதாலும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

அதைத் தொடர்ந்து ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்த ரிட் மனுக்கள் மீதான விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு ஒன்றாக விசாரணை நடைபெற்றது. கடந்த 4–ந் தேதி நடைபெற்ற இறுதிகட்ட விசாரணையின்போது இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு நேற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

தூக்கு தண்டனை ரத்து

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 3 பேரும் இதுவரை அனுபவித்துள்ள ஜெயில் தண்டனையை கணக்கில் கொண்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

மத்திய அரசு கருணை மனுக்களை முறையாக, விரைவாக பரிசீலனை செய்து முடிவை அறிவிக்க வேண்டும் என்றும், கருணை மனுக்களை பரிசீலனை செய்வதில் தேவையற்ற தாமதத்தை தவிர்க்கும்படி ஜனாதிபதிக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மாநில அரசு முடிவு

தீர்ப்பில் இந்த வழக்கில் மூவரும் 23 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள். குற்றவியல் சட்டத்தின் 432 மற்றும் 433–வது பிரிவுகளின் அடிப்படையில், மாநில அரசு தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலும், சட்ட ரீதியான வகையிலும் இவர்களுடைய சிறை தண்டனை காலத்தை பற்றிய முடிவை எடுக்கலாம் என்று தலைமை நீதிபதி சதாசிவம் கூறி இருந்தார்.

விடுதலை செய்ய உத்தரவு

இதைத்தொடர்ந்து இன்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவி சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள். 7 பேரையும் விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். 3 நாட்களில் மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்ய

இந்த முறைமையானது ஆன்லைன் உதவியுடன் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு என பார்ப்போம். ஆன்ட்ராய்ட் பற்றியோ கூகுள் பிளே ஸ்டோர் பற்றியோ பெரிய முன்னுரை தேவையில்லை என்று நினைக்கிறேன்.

ஆன்ட்ராய்ட் என்பது கூகுள் நிறுவனத்தின் மொபைல்/டேப் களுக்கான இயங்குதளம் ஆகும். இந்த இயங்குதளத்தில் இயங்கும் அப்ளிகேஷன்களுக்கென ஒரு சந்தையினை உருவாக்கியது அதற்கு பெயர் தான் பிளேஸ்டோர் ஆகும். இச்சந்தையில் தற்போது கூகுள் நிறுவனத்தின் சோதனைக்குட்பட்ட மென்பொருள்கள் மட்டுமே உள்ளன.

ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை நாம் நேரிடையாக கணினியில் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆன்ட்ராய்ட் இயங்குதளம் நிறுவப்பட்ட மொபைல் சாதனம் மற்றும் டேப் லிருந்து மட்டுமே ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

கூகுள்பிளேஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களை கணினியில் பதிவிறக்கம் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.

தளத்திற்கான Link http://apps.evozi.com/apk-downloader/

எந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதற்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனின் URL முகவரி கண்டிப்பாக வேண்டும். URL முகவரியினை பெற பிளேஸ்டோர் சென்று குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியினை பெற்றுவிட முடியும்.

apk file download online - Tcinfo 1

Link-இல் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, குறிப்பிட்ட அப்ளிகேஷனின் முகவரியை (url) குறிப்பிட்டு பின் Generate Download Link என்னும் பட்டனை அழுத்தவும். சில நொடிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான Link கிடைக்கும் அதை பயன்படுத்தி கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

apk file download online - Tcinfo

கணினியில் தரவிறக்கம் செய்யும் ஆன்ட்ராய்ட் மென்பொருள்களை இனி வழக்கம்போல் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் உள்ள சாதனங்களில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கம்ப்யூட்டர்ல சி.டி மாட்டிகிச்சா…!

ஒரு ஆர்வத்தில் சி.டி. யை உங்கள் கணினியில் உள்ள DVD Drive–ல் போட்டு அதை இயக்கியிருப்பீர்கள்.
இயக்கம் முடிந்த பிறகு மீண்டும் அதை வெளியே எடுக்க முனையும்பொழுதுதான் உங்களுக்கு சிக்கலே ஆரம்பிக்கும்.. நன்றாக திறந்து மூடிக்கொண்டிருந்த டிரைவ் இப்பொழுது திறக்காமல் உங்கள் பொறுமையைச் சோதிக்கும்..
dvd-emergency-hole

DVD Drive Tray திறக்காமல் இருப்பதற்கான காரணங்கள்:

வழக்கம்போல முழுமுதல் காரணம் தூசிகள்தான். அதனோடு வேறேதேனும் ஒட்டும்பொருட்கள், தலைமுடி, அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கும். அல்லது DVD Drive Tray கதவுப் பகுதி பிளாஸ்டிக்கால் ஆனதால் அதில் ஏதேனும் விரிசல், உடைசல் ஏற்பட்டாலும் இவ்வாறு திறக்காமல் இருக்கலாம்.
இவ்வாறான தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாவீர்கள்… இப்பிரச்னைக்கு எளிய தீர்வுகள் இருக்கின்றன.
தீர்வு 1: 
உங்கள் CD Drive -மூடியின் கீழாக அருகில் பார்த்தால் ஒரு ஊசி நுழையும் அளவிற்கு ஒரு ஓட்டை இருக்கும். நன்றாக உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ஒரு சிலர் இதை கவனித்திருக்கமாட்டார்கள். (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பகுதி)
அந்த துளையில் ஒரு ஊசியை அல்லது பேப்பர் கிளிப் (paper clip) எடுத்து இலேசாக நுழைத்தால் போதும். உடனடியாக உங்களுடைய சி.டி டிரைவின் டிரே வெளியே வந்துவிடும்.
தீர்வு 2:
உங்கள் கணினியில் மைகம்ப்யூட்டர் ஐகான் மீது கிளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் அனைத்து டிரைவ்களும் காட்டப்படும். அதில் Devices with removable storage என்ற பிரிவின் கீழ் உங்கள் சி.டி. அடங்கிய ஐகான் (DVD Drive Icon) காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து எஜக்ட் (Eject) என்பதைக் கிளிக் செய்யவும்.
தீர்வு 3:
இந்த வழிமுறை கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டிய ஒன்று. முதலில் உங்கள் கணினியில் மின்சாரம் பாய்வதை தடை செய்ய வேண்டும். அதற்கு உங்களுடைய கணினியை shutdown செய்துவிடவும். பிறகு சி.டி. டிரைவின் டிரேவிற்கு அடியில் ஒரு பிளாட் ஸ்குரூ டிரைவை எடுத்து இலேசாக அதனடியில் செலுத்தி, DVD/CD Drive -ன் டிரேயை இலேசாக இழுக்கவும் (வேகமாக பலம்கொண்டு இழுக்கக்கூடாது). இப்பொழுது டிரே வெளியே வந்துவிடும்.
தீர்வு 4: 
இம்மூன்று வழிகளையும் பின்பற்றி DVD Drive கதவு திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? இருக்கவே இருக்கிறார் (Computer Doctor)கம்ப்யூட்டர் வைத்தியர் (பழுது பார்ப்பவர்). அவரிடம் சொல்லி அதனைச் சரிசெய்ய வேண்டியதுதான். ஆம் நண்பர்களே… கணினியைப் பொருத்தவரை தெரியாத செயல்களை நாம் செய்யும்பொழுது மிக கவனமுடன் செய்து பரீசித்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் அதற்குரியவர்களிடம் காண்பித்து சரிசெய்வதே சிறந்த முறை.

மேற்கண்ட மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி DVD Tray திறக்கவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் நான்காவது வழிமுறையான கணினி பழுது பார்ப்பவரை அழைத்துதான் பிரச்னையை சரிசெய்ய வேண்டும்.