கணினி கேள்வி-பதில்கள் (22.02.2010)

கேள்வி: சில வேளைகளில் என் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் மீடியா பிளேயர் இயங்க மறுக்கிறது. கோடக் இல்லை என்றெல்லாம் தகவல் தருகிறது. எதனால் இது ஏற்படுகிறது? இதற்கான தீர்வு தரவும்.

பதில்:
சில வேளைகளில் இந்த எர்ரர் மெசேஜ் காட்டப்படுவதாக எழுதி உள்ளீர்கள். இதிலிருந்து சில குறிப்பிட்ட பார்மட்டில் உள்ள வீடியோக்கள் இயங்கவில்லை என்று தெரிகிறது. இப்போது பல பார்மட்களில் வீடியோக்கள் கிடைக்கின்றன. அவற்றில் Divx, FLV, MP4, MKV போன்றவை அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் விண்டோஸ் மீடியா பிளேயர் இவற்றில் சில பார்மட்களை இயக்காது. இதற்கான தீர்வாக வேறு எதுவும் செய்திட முடியாது. வேறு ஒரு மீடியா பிளேயரை இறக்கி, இன்ஸ்டால் செய்திட வேண்டியதுதான். அந்த வகையில் வி.எல்.சி. மீடியா பிளேயர் ஒரு சிறந்த மீடியா பிளேயராகும். இதனை http://www.videolan.org/vlc என்ற முகவரி யிலிருந்து இலவசமாக இறக்கிப் பதியலாம். இது அவ்வப்போது மேம்படுத்தப்படுகிறது. சராசரியாக விநாடிக்கு 17 பேர் இதனை டவுண்லோட் செய்வதாக தகவல்கள் உள்ளன. எனவே இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்து இயக்கவும்.

கேள்வி: முன்பு ஐ.பி. அட்ரஸ் குறித்து விளக்கம் அளித்து அதனை எப்படி அறிவது என்றும் எழுதி இருந்தீர்கள். பிரவுசர் சிக்னேச்சர் ஒன்று இதனுடன் சொல்லப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது?

பதில்:
இன்டர்நெட்டில் இணையும் ஒரு கம்ப்யூட்டரின் தனி அடையாளம் தான் அதன் ஐ.பி. முகவரி. பிரவுசர் சிக்னேச்சர் என்பது, உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் பிரவுசர் குறித்த அனைத்து தகவல்களையும் அடக்கியுள்ள தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக என் பிரவுசர் சிக்னேச்சரைத் தேடிய போது Mozilla/5.0 (Windows; U; Windows NT 5.1; enUS; rv:1.9.1.7) Gecko/20091221 Firefox/3.5.7 GTB6 எனக் கிடைத்தது. நீங்கள் ஒரு வெப்சைட்டில் உங்கள் கம்ப்யூட்டரை இணைக்கும் போது, இந்த பிரவுசர் சிக்னேச்சரை, உங்கள் பிரவுசர் அதற்கு அனுப்பும். இதில் பிரவுசரின் பெயர், அதன் பதிப்பு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்ற தகவல்களைக் காணலாம்.

கேள்வி: ஓப்பன் ஆபீஸ் என்பது மைக்ரோசாப்ட் தந்துள்ள ஆபீஸ் தொகுப்பிற்கு இணையானது என்று கூறுகிறார்கள். இது இலவசம் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையா? இலவசம் எனில் சிடியாகக் கிடைக்குமா? யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

பதில்:
மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கியதாக இயங்குவது ஓப்பன் ஆபீஸ் ஆகும். ஆபீஸ் டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷீட், பிரசன்டேஷன் மற்றும் பல வகையான பைல்களை உருவாக்கவும், பயன்படுத்தவும் இது வழி வகுக்கிறது. இந்த அப்ளிகேஷன் தொகுப்பு உருவாக்கப் பயன்பட்ட புரோகிராம் வரிகளை யாரும் இன்டர்நெட்டிலிருந்து பெறலாம் என்பதால், பல புரோகிராமர்கள் இதனைச் செம்மைப் படுத்தியுள்ளனர். இந்த ஆபீஸ் தொகுப்பிற்கு பல பாராட்டுரைகள் உலகெங்கும் கிடைத்துள்ளன. இது முற்றிலும் இலவசமே. ஆங்கிலத்தில் வரும் கம்ப்யூட்டர் இதழ்களுடன் வழங்கப்படும் சிடிக்களில் இந்த தொகுப்பு தரப்படுகிறது. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்டர் நெட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்திட நீங்கள் அணுக வேண்டிய இணைய தள முகவரி http://download.openoffice.org/other.html

கேள்வி: மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போல ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களைப் பயன்படுத்த ஏதுவான புரோகிராம்களில் ஒன்றைக் கூறவும். இலவசமாகக் கிடைக்கும் இன்டர்நெட் வெப்சைட் முகவரியையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:
தண்டர்பேர்ட் என்னும் இமெயில் கிளையண்ட் புரோகிராம் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ் நிறைவேற்றும் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளும். பி.ஓ.பி. மற்றும் ஐமேப் இமெயில் அக்கவுண்ட்களை இதில் மேற்கொள்ளலாம். இதனை மொஸில்லாவின் தளத்திலிருந்து மேற்கொள்ளலாம். இதன் முகவரியைச் சரியாகத் தருவதென்றால், கீழேயுள்ளவற்றை தவறின்றி டைப் செய்திடவும். http://www.mozilla.com/enUS/products/download. html? product=thunderbird2.0.0.14&os=win&lang=enUS

கேள்வி: நார்டன் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, எனக்கு கம்ப்யூட்டர் வழங்கிய கடைக்காரர் வழங்கியுள்ளார். தான் பணம் கொடுத்து வாங்கி எனக்கு இலவசமாகத் தந்துள்ளதாகக் கூறுகிறார். ஆனால் இது என் பெர்சனல் கம்ப்யூட்டர் செயல்படுவதனை மிகத் தாமதப்படுத்துவது போலத் தெரிகிறது. இதனையே என் நண்பர்களும் கூறுகின்றனர். மேலும் பணம் செலவழிக்காமல் பயன்படுத்தக் கூடிய நல்ல ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு ஒன்று பற்றி தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பதில்: ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் நார்டன் ஆண்ட்டி வைரஸ் மிகச் சிறந்த ஒன்றாகும். இருந்தாலும் நீங்கள் கூறும் குற்றச் சாட்டினை இன்னும் பல வாசகர்களும் எழுதி உள்ளனர். இதற்குப் பதிலாக எனில் ஏ.வி.ஜி. நிறுவனம் தரும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. அண்மையில் வெளி வந்த பதிப்பில் ஆண்ட்டி ஸ்பைவேர் மற்றும் ஆண்ட்டி ரூட்கிட் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இவை தவிர இன்னும் சில வசதிகளும் உள்ளன. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.avg.com/ inen//downloadavgantivirusfree#tba2

கேள்வி: என்னுடைய பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கி ஓராண்டு கழிந்த நிலையில், அதில் உள்ள சிடி/டிவிடி ட்ரேயின் கதவு, எஜெக்ட் பட்டனை அழுத்தினால் திறக்க மறுக்கிறது. வாரண்டி முடிந்து விட்டதால், ரிப்பேர் செய்திட அதிகம் கேட்கும் வாய்ப்பு உள்ளது. வந்து போகவே ரூ.300 கட்டாயம் என்கின்றனர். ஒவ்வொரு முறையும் மை கம்ப்யூட்டர் சென்று, சிடி ஐகானில் கிளிக் செய்து அதில் கிடைக்கும் எஜெக்ட் பிரிவில் என்டர் செய்து, ட்ரே மூடியைத் திறக்கிறேன். இதற்கு வேறு வழி உள்ளதா? தயவு செய்து உதவவும்.

பதில்:
இது போல சில சிக்கல்களில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். நீங்கள் எழுதியுள்ளபடி வந்து போக ரூ.300, பின் பழுது பார்க்க சில நூறு என்றால், நாம் பழுது பார்ப்பதைத் தள்ளித்தான் போடுவோம். சரி, பிரச்னைக்கு வருவோம். மை கம்ப்யூட்டரில் உள்ள எஜெக்ட் அழுத்தி உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் உங்களை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால், பலருக்கு இது பற்றிக் கூடத் தெரியாது.
உங்கள் தேவையை மனதில் கொண்டு இணையத்தில் தேடியபோது அருமையான ஒரு புரோகிராம் குறித்த தகவல் கிடைத்தது. அதன் பெயர், சொன்னால் நம்பமாட்டீர்கள், Eject CD. உங்களுக்காகவே அந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டது போல உள்ளது. இதனைத் தரும் தளத்தின் பெயர் தான் சற்று நீளம். http://forums.overclockersclub.com /index.php?s= 6abe97fda39 274f8d93322c52dce 8902&act=attach&type= post&id= 9952 பிரவுசரில் சரியாக டைப் செய்து என்டர் தட்டவும். இந்த புரோகிராம் பைல் ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கிறது. இதனை விரித்து புரோகிராம் கிடைத்தவுடன் இயக்கி, ஸ்டார்ட் மெனு மீதாக பின் அப்பில் வைத்துக் கொள்ளவும் அல்லது குயிக் லாஞ்ச் பாரில் வைத்துக் கொள்ளலாம். இதில் சிங்கிள் கிளிக் செய்தால் போதும். சிடி ட்ரே தள்ளிக் கொண்டு வெளியே வரும்.

கேள்வி: நான் பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்து கிறேன். இதன் மூலம் பைல்களை டவுண்லோட் செய்கையில் ஒரே நேரத்தில் இரண்டு தளங்களில் இருந்து மட்டுமே டவுண்லோட் செய்திட முடிகிறது. என்னிடம் அதிவேக இணைய இணைப்பு இருப்பதால், கூடுதலான தளங்களிலிருந்து டவுண்லோட் செய்திட முடியுமா? அதற்கான வழி என்ன?

பதில்:
உங்களுக்கு ஒன்று தெரியுமா தினேஷ்! இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் மட்டுமே, ஒரே நேரத்தில் இரண்டு தளங்களிலிருந்து பைல் டவுண்லோட் செய்திட அனுமதி அளிக்கிறது. நீங்கள் இன்னும் வேண்டும் என்கிறீர்கள். பரவாயில்லை. பயர்பாக்ஸ் அட்ரஸ் பாரில் about:config என டைப் செய்திடுங்கள். அடுத்து உங்களுக்குக் கிடைக்கும் விண்டோவில் network.http.maxpersistentconnectionsperserver என்ற வரியில் டபுள் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் பாக்ஸில் நீங்கள் எத்தனை தளங்களிலிருந்து ஒரே நேரத்தில் டவுண்லோட் செய்திட விரும்புகிறீர்கள் என்ற வேல்யு கொடுக்க வேண்டியதிருக்கும். கொடுக்கவும். ஒரேயடியாக மிக அதிகமாகக் கொடுத்தால், பிரச்னைக்குள்ளாகலாம். ஓகே கிளிக் செய்து, பயர்பாக்ஸை மீண்டும் இயக்கி, பின் டவுண்லோட் செய்து பார்க்கவும்.

Advertisements

2 thoughts on “கணினி கேள்வி-பதில்கள் (22.02.2010)

  1. இனியன்

    நண்பரே, நான் சவூதியில் சிறியதாக ஒரு கடை ஆரம்பிக்க இருக்கிறேன். கடைக்கு தேவையான ஒரு மென்பொருள் எனக்கு தேவைபடுகிறது. இது ஒரு கம்ப்யூட்டர் உதிரிப்பொருள் விற்பனை நிலையம் கூடுதலாக பழுது பார்க்கும் சர்வீசும் செய்யப்போகிறேன். கடையில் உள்ள பொருட்கள் வாங்கும் போது அதை கணிணியில் ஏற்றவும் அதே போல் விற்ற பொருள்களின் பில் போடவும், பிறகு அதை இன்வெண்டரியில் கணக்கெடுக்கவும் ஏற்ற வகையில் ஒரு மென்பொருள் விலை குறைவாக ஒரு மென் பொருளை எனக்கு எங்கு கிடைக்கும் என்று சொன்னால் உபயோகமாக இருக்கும். உங்கள் சேவைக்கு எனது பாராட்டுக்கள் நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s