கணினி கேள்வி-பதில்கள் (01.03.2010)

கேள்வி: கம்ப்யூட்டரில் டயலாக் பாக்ஸ், வேல்யூ பாக்ஸ், எர்ரர் மெசேஜ் பாக்ஸ் கேள்விப் பட்டுள்ளேன். அலர்ட் பாக்ஸ் என்பது என்ன? இதில் என்ன மெசேஜ் அல்லது அறிவிப்பு கிடைக்கும். நாம் பதிலளிக்க வேண்டியதிருக்குமா?

பதில்:
நீங்கள் குறிப்பிட்ட பாக்ஸ் போலவே தான் இதுவும் கிடைக்கும். இதனை நீங்கள் பலமுறை ஸ்கிரீனில் பெற்றிருப்பீர்கள். கம்ப்யூட்டரில் வேலை மேற்கொண்டிருக்கையில் நீங்கள் மேற்கொள்ளப் போகும் பணியின் தன்மையை நீங்கள் உணர்ந்துதான் மேற்கொள்கிறீர்களா என்பதனை, இந்த அலர்ட் பாக்ஸ் உறுதிப்படுத்திக் கொள்ளும். எடுத்துக் காட்டாக, ஒரு பைலை அழிக்க முயற்சிக்கையில், இது நீக்கப்பட்டு ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லும். அந்த வேலையைத் தான் மேற்கொள்கிறீர்களா? என்று கேட்டு உங்களை யெஸ் அல்லது நோ விடை கேட்டு ஒரு பெட்டி கிடைக்கும். அதுதான் அலர்ட் பாக்ஸ். அதே போல ரீசைக்கிள் பின்னிலிருந்து பைலை நீக்குகையில் நிரந்தரமாக பைல் நீக்கப்படவுள்ளது. செய்திடவா? என்ற செய்தியுடன் ஒரு பாக்ஸ் கிடைக்கிறதே, அதுதான் அலர்ட் பாக்ஸ்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் என்டர் அழுத்தினால், அது கீழேயுள்ள செல்லுக்குச் செல்லாமல், மேலே உள்ள செல்லுக்குச் செல்கிறது. இதனை எப்படி மாற்றலாம்?
 

பதில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் என்டர் அழுத்துகையில் நீங்கள் விரும்பும் திசையில் கர்சர் செல்லும்படி மாற்றும் வழியை செட் செய்திடலாம். Tools மெனு சென்று அதில் Options  தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Options dialog box காட்டும். இதில் Edit என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும். இங்கு Move Selection after Enter என்பதனைக் காணவும். அங்கு கிடைக்கும் ட்ராப் டவுண் (Drop Down) மெனுவினைப் பெற்று அதில் ஈணிதீண என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.

கேள்வி: பைல்களின் பார்மட்டை மாற்ற புரோகிராம் களைப் பயன்படுத்தாமல் முடியுமா? ஏனென்றால் இன்டர்நெட்டில் கிடைக்கும் புரோகிராம்கள் எல்லாம் சில நாட்களில் பணம் டாலரில் கட்டச் சொல்கின்றனர். எனக்குப் பெரும்பாலும் பல வகை பைல்களை பி.டி.எப். ஆகவும், பி.டி.எப். லிருந்து அதன் சோர்ஸ் பைலாகவும் மாற்ற வேண்டியுள்ளது.

பதில்
: பாடுபட்டு சாப்ட்வேர் தயாரித்தவர்கள், அதனைப் பயன்படுத்துவோரிடமிருந்து கட்டணம் செலுத்துங்கள் என்று கேட்பதில் தவறில்லை. உங்களின் நிலையும் தேவையும் நன்றாகப் புரிகிறது. பைல்களின் பார்மட் பல வேளைகளில் நமக்கு பிரச்னை கொடுக்கும். ஒரு பார்மட்டிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற்ற முடியாது. மாற்றினால் தான் அவற்றை இயக்க முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்போம். இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்களையோ, அதனை இயக்கக் கூடிய புரோகிராம்களையோ தேடி அலைவோம். இந்த சிக்கலைத் தீர்க்க http://www.cometdocs.com/ என்ற தளம் உதவுகிறது. இந்த பார்மட் மாற்றித் தரும் தளத்திற்கு முதலில் செல்லுங்கள். அங்கு சென்ற பின் பார்மட் மாற்ற வேண்டிய பைலை அந்த தளத்தில் அப்லோட் செய்துவிடவும். எந்த பார்மட் மாற்றம் தேவை எனக் குறிக்க வேண்டும். பின் பார்மட் மாற்றப்பட்ட பைல், உங்கள் கம்ப்யூட்டரில் எந்த டிரைவில் வந்து சேர வேண்டும் என்பதனை அமைத் திடுங்கள். பின் நீங்கள் குறிப்பிடும் இமெயிலுக்கு, பார்மட் மாற்றப்பட்ட பைல் அனுப்பப்படும்.
பொதுவாக பி.டி.எப். பைலை அதன் சோர்ஸ் (வேர்ட், பிரசன்டேஷன், எக்ஸெல்) பார்மட்டிற்கு மாற்றவே எண்ணுவோம். இந்த பார்மட் மாற்றும் புரோகிராம், பலவகையான BMP, JPG, GIF, XLS, html, PPS, SXI, SXM, PPT)  பார்மட்களை பி.டி.எப். பார்மட்டுக்கும், அதிலிருந்து அதன் ஒரிஜினல் பார்மட்டுக்கும் மாற்றுகிறது.

கேள்வி: நான் தமிழ் பைபிள் தளம் ஒன்றில் பைபிள் வாசகங்களைப் பார்த்தேன். அது எழுத்துக்கள் மற்றும் எண்களாகவே தெரிகின்றன. அந்த தளத்திலேயே தமிழ் பைபிள் (Tamil Bible)  என்று ஒரு பாண்ட் இருந்தது. அதனை டவுண்லோட் செய்திட போட்டிருந்தது. செய்தேன். அந்த பாண்ட் என் கம்ப்யூட்டரில் டெஸ்க் டாப்பில் பைலாக உள்ளது. அதன் பின்னும் அந்த தளம் சென்றால், அப்படியே புரியாத வகையில் தான் உள்ளது. என்ன செய்திட வேண்டும் என விளக்கவும்.

பதில்:
பைபிள் படிப்பதில் உள்ள உங்களின் பக்திக்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள். நீங்கள் எழுத்து வகை பைலை டவுண்லோட் செய்து டெஸ்க்டாப்பில் வைத்தால் மட்டும் போதாது. அதனை விண்டோஸ் டைரக்டரி யில் உள்ள பாண்ட்ஸ் போல்டரில் போட்டு இன்ஸ்டால் செய்திட வேண்டும். முதலில் டெஸ்க்டாப்பில் உள்ள பைலைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல்+ சி (Ctrl+C) கொடுத்து காப்பி செய்து கொள்ளவும். உங்களுடைய சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி என்பதால், சி (C🙂 டிரைவில் விண்டோஸ் (Windows)  என்பதில் கிளிக் செய்து, பின் பாண்ட்ஸ் (Fonts)  என்னும் போல்டரில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து எழுத்து வகை பைல்களும் காட்டப்பட்டும். காலியாக உள்ள இடத்தில் கர்சரை வைத்து, ரைட் கிளிக் செய்து கிடைக் கும் மெனுவில் பேஸ்ட் (Paste) என்னும் பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் டெஸ்க் டாப்பில் வைத்துள்ள தமிழ் பைபிள் என்னும் பாண்ட் இங்கு தானாக இன்ஸ்டால் செய்யப்படும். இனி அந்த தளம் சென்று பாருங்கள். பைபிள் தமிழில் படிக்கக் கூடிய வகையில் கிடைக்கும்.

கேள்வி: என் நண்பர் எனக்கு தமிழ் என்டர் செய்வதற்குத் தேவையான புரோகிராம் பைல் கொடுத்துள்ளார். இதற்கு ஷார்ட் கட் கீ ஒன்றை அமைக்க என்ன செய்திட வேண்டும்? நன்றி.


பதில்:
அந்த புரோகிராமிற்கான எக்ஸ்கியூட்டபிள் பைல், எந்த இடத்தில் உள்ளதோ, அங்கு சென்று அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும்.பின் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் சிறிய விண்டோவில் மூன்று டேப்கள் இருக்கும். இதில் ஷார்ட் கட் என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் இரண்டாவது பிரிவில் ஷார்ட்கட் கீ என்று ஒரு வரி இருக்கும். இதன் அருகே இருக்கும் பாக்ஸில் உங்கள் கர்சரை நிறுத்தவும். இப்போது நீங்கள் எந்த கீகளை அழுத்தினால், இந்த புரோகிராம் இயக்கத்திற்கு வர வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த கீகளை இங்கு டைப் செய்திடவும். எடுத்துக் காட்டாக Ctrl+Shft+T என அமைக்கலாம். பின் அப்ளை (Apply)  என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். அப்படியும் வராமல் இருந்தால், இந்த கீகள் வேறு ஒரு புரோகிராமிற்கு அல்லது செயல்பாட்டிற்கு ஏற்கனவே அமைக்கப் பட்டுவிட்டன என்று பொருள். மீண்டும் சென்று அங்கு வேறு கீ தொகுப்பினை உருவாக்கவும்.

கேள்வி: விர்ச்சுவல் கீ போர்டு என்பது என்ன? பணம் சார்ந்த விவகாரங்களுக்குக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் போது, அதனைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவது ஏன்?

பதில்
: விர்ச்சுவல் கீ போர்டு என்பது புரோகிராம் ஒன்றினால் அல்லது இணைய தளங்களினால் திரையில் காட்டப்படும் கீ போர்டு. கீ போர்டு மூலம் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களை அமைத்தால், நம் கம்ப்யூட்டரில் நம் செயல்பாடுகளை வேவு பார்க்கவும், இது போல பாஸ்வேர்ட்களைத் திருடவும் அனுப்பப்பட்ட புரோகிராம் களால் அவற்றைத் திருட முடியாது. ஏனென்றால் கீ போர்டு இல்லாமல், மவுஸின் கர்சரைக் கொண்டு விர்ச்சுவல் கீ போர்டினை இயக்குகிறோம். மேலும் விர்ச்சுவல் கீ போர்டில், அவ்வப்போது கீகள் மாறி கிடைக்கும். எனவே விர்ச்சுவல் கீ போர்டு கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்துவதே நல்லது.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள டேட் அண்ட் டைம் எப்படி திருத்தினாலும் 01 ஜனவரி 1999 என்றே காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்?

பதில்:
உங்களுடய மதர்போர்டில் இதற்கென உள்ள சிறிய வட்ட வடிவிலான சீமாஸ் பேட்டரி காலாவதியாகி, செயல் இழந்துவிட்டது. இதனை மாற்ற வேண்டும். நீங்கள் செட் செய்த நேரம் மற்றும் நாள், கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன் தொடர்ந்து அப்படியே இருக்க சிறிய அளவில் மின்சக்தி தேவை. அதனை இந்த பேட்டரி தான் தருகிறது. இது செயல் இழந்து போனதால், கம்ப்யூட்டர் தொடங்கியவுடன் நீங்கள் குறிப்பிடும் நாளைக் காட்டுகிறது. மாற்றிவிட்டால் சரியாகிவிடும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s