கணினி கேள்வி-பதில்கள் (15.03.2010)

கேள்வி: படம் எதனையாவது காப்பி செய்து ஒட்ட முயற்சிக்கையில், அதன் மேலேயே காப்பி பேஸ்ட் ஆகிறது. ஏன் நாம் கர்சர் இருக்கும் இடத்தில் ஒட்ட மறுக்கிறது. இதனை ஒரே கீ செயல்பாட்டில் மற்ற டெக்ஸ்ட் ஒட்டுவது போல ஒட்ட முடியாதா?

பதில்:பைல் ஒன்றில் படம் அல்லது வேறு ஏதேனும் ஆப்ஜெக்ட் ஒன்றின் காப்பியை இன்னொரு இடத்தில் அதே பைலில் பேஸ்ட் செய்திட விரும்புகிறீர்களா? என்ன செய்கிறீர்கள்? முதலில் ஆப்ஜெக்டைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். கண்ட்ரோல்+சி (Ctrl+C)அழுத்தி காப்பி செய்கிறீர்கள். அல்லது எடிட்(Edit)மெனு சென்று அதில் காப்பி  (Copy) கிளிக் செய்கிறீர்கள். பின் ஒட்ட வேண்டிய இடத்திற்குச் சென்று, கர்சரை வைத்து அங்கு பேஸ்ட் (Ctrl+V / Paste in Edit menu) கமாண்ட் கொடுக்கிறீர்கள். என்ன நடக்கிறது? நீங்கள் காப்பி செய்த படத்தின் நகல், ஒரிஜினல் இருக்கும் இடத்திலேயே பேஸ்ட் செய்யப்படுகிறது. சரியாக அதன் மேல் பேஸ்ட் செய்யப்படாமல், இதோ இங்கு தான் காப்பி உள்ளது என்று காட்டும் வகையில் சிறிது இடம் விட்டு பேஸ்ட் செய்யப்படுகிறது. இதன்பின் நாம் மவுஸின் கர்சரைக் கொண்டு அதனை இழுத்து வந்து பேஸ்ட் செய்திட வேண்டிய இடத்தில் அமைக்கிறோம். இந்த இழு பறி இல்லாமல் ஒரே கீ அழுத்தலில், ஒட்ட வேண்டிய இடத்திற்கு படத்தைக் கொண்டு வரும் வழி ஒன்று உள்ளது.
முதலில் காப்பி செய்ய வேண்டிய ஆப்ஜெக்ட் அல்லது படத்தை தேர்ந்தெடுக்கவும். அடுத்து கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொள்ளவும். பின் ஆப்ஜெக்ட் மீது கிளிக் செய்து அப்படியே எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ, அங்கு இழுத்து வந்து விடவும். பேஸ்ட் ஆகிவிடும். அய்யோ! ஒரிஜினல் அல்லவா இங்கு வந்துவிட்டது என்ற பதற்றம் வேண்டாம். நகல் ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதுதான் பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது. ஒரிஜினல் ஆப்ஜெக்ட் அந்த இடத்திலேயே அப்படியே இருக்கும்.

கேள்வி: நான் எக்ஸ்பி மற்றும் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன். அதில் நெட்டு ரூலர் இல்லை. என்ன செட் செய்தாலும் கிடைக்கவில்லை. வியூ மெனு சென்று பலமுறை ரூலர் டிக் செய்து பார்த்துவிட்டேன். பார்மட் மெனுவில் ஏதாவது செய்திட வேண்டுமா? வழி காட்டவும்.

பதில்:
இந்த சூழ்நிலை பலருக்கு ஏற்படுகிறது. வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களில் இருந்து இதனை அறிந்திருக்கிறேன். இதற்கான பதிலும் சில மாதங்களுக்கு ஒருமுறை இந்த பகுதியில் வந்திருக்கிறது. முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். பிரிண்ட் லே அவுட் என்ற வகையில் தோற்றம் (View) அமைந்தால் மட்டுமே நெட்டு வாக்கிலான ரூலர் தெரியும். எனவே View மெனு சென்று Print Lay out பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். Vertical Ruler ட்டிங் Options விண்டோவில் தரப்பட்டுள்ளது. அதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். Tools மெனு கிளிக் செய்து, Options பிரிவு தேர்ந்தெடுத்து கிடைக்கும் விண்டோவில் View டேப் செல்லவும். இந்த விண்டோவில் Print Lay outOptions என்று மூன்றாவதாக ஒரு பிரிவு காட்டப்படும். அதில் Vertical Ruler (Print View only) என்று இருப்பதைத் தேர்ந்தெடுத்து Oஓ கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் வேர்டில் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால், வெர்டிகல் ரூலர் உங்களுக்குக் கிடைக்கும்.

கேள்வி: ஆண்ட்டி வைரஸ் இலவச புரோகிராம்கள் பலவற்றைப் பட்டியலிடுகிறீர்கள். நீங்கள் சோதனை செய்து பார்த்த புரோகிராம்களின் பட்டியலை, அவற்றின் நிறை குறைகளுடன் சுருக்கமாகத் தரவும்.

பதில்:
சரியான கேள்வி. பட்டியல் மட்டும் போட்டால் சரியல்ல; பழகிப் பார்த்து சொல்லுங்க என்று கேட்பது நியாயமான கேள்வி தான். என்னுடைய மற்றும் என் நண்பர்களின் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டு, நல்லவை என்று சொல்லப்படும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இங்கு பார்க்கலாம். அவை எதில் சிறப்பாக உள்ளன. எந்த எதிர்பார்ப்பினை செயல்படுத்துவதில் சுணக்கமாய் உள்ளன என்று பார்ப்போம்.
Avast Home Edition: இது மால்வேர் தொகுப்புகளைக் கண்டறிவதில் சிறப்பாய் இயங்குகிறது. இதனுடைய இன்டர்பேஸ் பயன்படுத்துபவர்களைச் சற்றுக் குழப்பமடையச் செய்திடும்.
AntiVirus Free Edition 8.5: பெர்சனல் கம்ப்யூட்டர்களில் வைரஸ்கள் பரவாமல் தடுப்பூசி போட்டது போல பாதுகாக்கும் தன்மை உடையது. ஸ்கேன் செய்யச் சொன்னால் கொஞ்சம் மெதுவாகச் செயல்படும். வைரஸ் பாய வருகிறது என்றால், அது எங்கிருந்து வந்தாலும் தடுத்து செய்தி தரும்.
Avira Anti Virus Personal:பாதித்துள்ள வைரஸ்களை மிகச் சிறப்பாகக் கண்டறியும் தன்மை கொண்டது. அவற்றைக் கம்ப்யூட்டரிலிருந்து களைவதிலும் தனித்தன்மை கொண்டது. ஆனால் இதன் இன்டர்பேஸ் சற்று குழப்பமான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், முதன் முதலில் இதனைப் பயன்படுத்துபவர்கள் சற்று தடுமாறுவார்கள். ஸ்கேன் செய்வதில் வேகம் மற்றும் முழுமையான பாதுகாப்பு ஆகிய இரண்டு செயல்களுக்காகப் பன்னாட்டளவில் பெயர் பெற்றது.
Microsoft Security Essentials (Beta): தொற்றிக் கொண்ட வைரஸ்களைக் களைவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. சற்று வேகம் குறைவு எனலாம். சிறப்பான புரோகிராம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கேள்வி: சென்ற பிப்ரவரி 22 தேதியிட்ட கம்ப்யூட்டர் மலரில் சிடி எஜக்ட் செய்வது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், எஜக்ட் சிடி புரோகிராம் குறித்து எழுதி, நீளமான முகவரி கொண்ட இணையதள முகவரி கொடுத்திருந்தீர்கள். அதனை டைப் செய்து முகவரி அமைத்தால், தளம் திறக்க மறுக்கிறது. எனக்கும் என் நண்பர்களுக்கும் அந்த புரோகிராம் தேவையாய் உள்ளது. மாற்று வழி சொல்லவும்.

பதில்:
நீங்கள் கூறுவதைப் போல இன்னும் சில வாசகர்களும் கடிதம் எழுதி உள்ளனர். நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க புதிய தகவல்களாக இரண்டு மாற்று வழிகளைத் தருகிறேன். அன்றைய இதழில், மிக நீளமான அந்த முகவரியில், சிறு தவறு ஏற்பட்டாலும் தளம் திறக்காது. இருப்பினும் அதன் முதன்மைப் பெயர் அமைத்துத் தளம் சென்று தேடிப் பார்க்கலாம். புதுத் தகவலுக்கு வருவோம். சிடி ட்ரே திறக்காமல் பிரச்னை செய்திடுகையில், பயன்படுத்தக் கூடிய புரோகிராம்கள் உங்களுக்குத் தேவை, இல்லையா! இணையத்தில் இரண்டு புரோகிராம்களைப் பார்த்தேன். ஒன்று 30 நாட்கள் மட்டுமே இலவசமாகப் பயன்படுத்தக் கூடியது. அதன் பெயர் CD Eject Tool இதனைத் தரும் தளத்தின் முகவரி http://www.cdejecttool.com. இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து, சிஸ்டம் ட்ரேயில் வைத்துக் கொண்டால், அந்த ஐகானைக் கிளிக் செய்து சிடி ட்ரேயின் கதவினைத் திறக்கச் செய்யலாம்.
இன்னொரு புரோகிராம் பெயர் Hotkey CD Eject . இதனைத் தரும் தளத்தின் முகவரி http://www.snapfiles.com /get/hotkeycd.html. இது ஒரு சிறிய (281 கேபி) புரோகிராம். விண்டோஸ் தொடங்கும்போதே இதனையும் தொடங்கிடலாம். இது முற்றிலும் இலவசமே. அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகிறது. உங்களின் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி டிரைவ் இருந்தால், அவை அனைத்திற்கும் பயன்படும்படி இதனை செட் செய்திடலாம்.

கேள்வி: வேர்டில் டேபிள் ஒன்று உருவாக்கினேன். அது சற்று நீளமாக இருக்கிறது. இதனால், அதில் உள்ள தகவல்கள் அர்த்தமில்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இதனை எப்படி இரண்டு டேபிளாகப் பிரிப்பது?

பதில்:
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் அமைப்பதில் நமக்குப் பல வசதிகள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று டேபிளைப் பிரிப்பது. நீங்கள் அமைத்திடும் டேபிள் மிகப் பெரிதாகச் செல்கிறதா? இதில் ஒரு பகுதியை டாகுமெண்ட்டின் இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணுகிறீர்களா? கவலையே வேண்டாம்.
எந்த படுக்கை வரிசையிலிருந்து புதிய டேபிள் உருவாக்கப்பட வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அந்த வரிசையின் முதல் செல்லுக்குக் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் டேபிள் மெனு சென்று கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அந்த வரிசையிலிருந்து புதிய டேபிள் ஒன்று தரப்படும். இந்த இரண்டு டேபிள்களையும் தனித்தனி டேபிள்களாகப் பயன்படுத்தலாம்.

கேள்வி: என்னிடம் உள்ள பி.டி.எப்.டாகுமெண்ட்டில் காப்பி செய்ய முயற்சிக்கையில் கர்சர் சிறிய கை போல ஆகிறது. நான் மவுஸ் கிளிக் செய்கையில் அது மூடி விரிகிறது. எப்படி டெக்ஸ்ட் செலக்ட் செய்து காப்பி செய்வது?

பதில்:
பி.டி.எப். டாகுமெண்ட் ரீடரில் காட்டப்படும் கை அடையாளம், உங்கள் டாகுமெண்ட்டைப் பிடித்து மேலும் கீழும் நகர்த்தத் தந்துள்ள வசதியாகும். டெக்ஸ்ட் காப்பி செய்திட, அந்த கர்சரை Select Text tool க மாற்ற வேண்டும். டூல்பாரில் கை ஐகானை அடுத்து பார்த்தால், டெக்ஸ்ட் கர்சர் கிடைக்கும். இதில் பாய்ண்ட்டர் ஆரோ தெரியும். இதுதான் உங்கள் டெக்ஸ்ட் டூல். இதனைத் தேர்ந்தெடுத்து பி.டி.எப். பக்கத்தில் உங்களுக்குத் தேவையான டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து பின் காப்பி செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி பி.டி.எப். டாகுமெண்ட்டில் உள்ள படங்களையும் செலக்ட் செய்திடலாம். அதற்கு “Copy Image” என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.உங்களுடைய அடோப் ரீடர் தொகுப்பு இந்த வசதியைக் கொண்டிருக்காவிட்டால், லேட்டஸ்ட் அப்டேட்டட் பதிப்பை இறக்கிப் பதியவும். இது முற்றிலும் இலவசமே. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய வெப்சைட் முகவரி:http://get.adobe.com/reader/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s