கணினி கேள்வி-பதில்கள் (22.03.2010)

கேள்வி: எனக்கு வரும் இமெயில்களுடன் பல அட்டாச்டு பைல்கள் வருகின்றன. சிவலற்றை எந்த புரோகிராம்கள் கொண்டு திறக்க வேண்டும் எனத் தெரியவில்லை. வைரஸ்கள் வந்துவிடுமோ என்ற கவலையும் உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க வழி சொல்லவும்?

பதில்: மின்னஞ்சல்களுடன் வரும் இணைக்கப்பட்ட பைல்களைத் திறக்கும் முன், அதனை யார் அனுப்பியது என்று பார்க்கவும். அறிமுகம் இல்லாதவர் அனுப்பினால், அஞ்சலில் உள்ள செய்தியைப் படித்துவிட்டு அழித்துவிடவும். தெரிந்த நண்பர் பெயரில் வந்தாலும், அதனை நீங்கள் எதிர்பார்க்க வில்லை என்றால், அவருக்கு ஒரு மெயில் அனுப்பி இது போல நீங்கள் அனுப்பினீர்களா? எதற்காக? என்று கேட்டுவிட்டு பின், திருப்தியான பதில் வந்தால் மட்டுமே திறக்கவும்.
.pps என்ற துணைப் பெயருடன் வரும் பைல்கள், பிரசன்டேஷன் பைல்கள் என்றாலும், இவற்றுடன் அதிக அளவில் வைரஸ்கள் வருவதால், கவனமாகச் செயல்படவும். அதே போல .exe , .scr அல்லது .pif என்ற துணைப்பெயர்களுடன் வரும் பைல்களையும் கவனமாகக் கையாளவும். சரியான நண்பர்களிடமிருந்து, தேவைப்படும் பைல் வந்த நிலையில் அதனைத் திறப்பதற்கான புரோகிராம் இல்லாததுவும் ஒரு சிக்கலே. கீழே வழக்கமான துணைப் பெயர்களையும் அவை கொண்டுள்ள பைல்களைத் திறக்கக் கூடிய புரோகிராம்களையும் பட்டியலிட்டுள்ளேன்.
.doc மைக்ரோசாப்ட் வேர்ட்
.pps எம்.எஸ். பவர்பாய்ண்ட்
.xls எம்.எஸ். எக்ஸெல் ஒர்க்ஷீட்
.wpd கோரல் வேர்ட் பெர்பெக்ட்
.pdf அடோப் அக்ரோபட்
.jpg ஜேபெக் அல்லது கிராபிக் பைல்
.zip ஸிப் அல்லது சுருக்கப்பட்ட பைல்
.sit இதுவும் ஒரு வகை சுருக்கப்பட்ட பைல்
.scr விண்டோஸ் ஸ்கிரீன் சேவர். இதனைத் திறக்க வேண்டா.ஆபத்து 75% பைல்களில் இருக்கலாம்.
.pif புரோகிராம் இன்பர்மேஷன் பைல். இதனையும் திறக்க வேண்டாம்.
இந்த புரோகிராம்கள் உங்களிடம் இல்லை என்றாலும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த புரோகிராம்களைத் தயாரித்தவர்கள், ஆன்லைனில் இந்த புரோகிராம்களைத் தந்துள்ளனர். அவற்றைத் திறந்து பயன்படுத்தலாம். ஆனால் எடிட் செய்திட முடியாது.

கேள்வி: இன்டர்நெட் யாருக்கு அல்லது எந்த நாட்டுக்குச் சொந்தம்? ஐ.நா சபை இதில் எந்த அளவில் கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளது.?

பதில்: இன்டர்நெட்டை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தனி ஒரு மனிதனோ அல்லது தனி அமைப்போ, இன்டர்நெட்டுக்கு உரிமை கொள்ள முடியாது. பல நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு பெரிய நெட்வொர்க்கே இன்டர்நெட். இதில் எந்த ஒரு நெட்வொர்க் கழன்று கொண்டாலும், மற்றவை இணைந்தே செயல்படும். இந்த நெட்வொர்க் அனைத்தும் பல நிறுவனங்கள், அமைப்புகள், தனி நபர்கள், அரசுகள், பள்ளிகள், கல்லூரிகள் எனப் பலவகை அமைப்புகளுக்குச் சொந்தம். எனவே ஒருவர் இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது. ஐ.நா.சபையின் அதிகார வரம்பிற்குள் இது வராது.
இருப்பினும், இன்டர்நெட் இயங்கும் தன்மையினை ஒரு சில தன்னார்வ அமைப்புகள் வரையறை செய்கின்றன. எடுத்துக்காட்டாக இணைய தளங்களுக்குப் பெயர் வைத்தல், நாடுகளுக்கான குறியீட்டு எழுத்துக்களை அமைத்தல் போன்றவற்றை பன்னாட்டளாவிய அமைப்புகள் செயல்படுத்துகின்றன. Internet Engineering Task Force, ICANN, InterNIC மற்றும் the Internet Architecture Board என இவற்றைக் கூறலாம். எனவே பயப்படாமல் இன்டர்நெட்டை வலம் வரவும்.

கேள்வி: பேக் அஸாங் சாப்ட்வேர் (Tag along software) என்ற சொல் தொடர் எதனைக் குறிக்கிறது? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

பதில்: உங்கள் நீண்ட கடிதத்தில் எழுதியுள்ள பல கேள்விகள் நீண்ட நூல்களில் தர வேண்டிய தகவல்களைக் கேட்கின்றன. மேலே தனித்துத் தரப்பட்டுள்ள கேள்வி, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது பிளாஷ் பிளேயர் போன்ற புரோகிராம்களை இலவசமாக டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், அதற்கான லிங்க் அருகே, மேக் அபி செக்யூரிட்டி ஸ்கேன் சாப்ட்வேர் தொகுப்பினையும் டவுண்லோட் செய்து கொள்ளலாம் என்று தகவலும் லிங்க்கும் தரப்பட்டிருக்கும். இது நமக்குத் தேவையில்லாமல் இருக்கலாம். இருப்பினும் தரப்பட்டிருப்பதனை எப்படி விலக்குவது என்று அறியாமல் அதனையும் சேர்த்து டவுண்லோட் செய்திடுவோம். ஆனால் நன்றாகப் பார்த்தால், அது இல்லாமல் தேவைப்படும் புரோகிராம் மட்டும் டவுண்லோட் செய்திடும் வசதி இருப்பதனை அறியலாம். இது போல உடன் தரப்படு சாப்ட்வேர் தொகுப்புதான் டேக் அலாங் சாப்ட்வேர் ஆகும். இந்த சொல் தொடர் இப்போதுதான் புழக்கத்தில் உள்ளது. இந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலம் அனைவரும் அறியும் வண்ணம் என்னிடம் இருந்து பதில் வாங்கிவிட்டீர்கள். நன்றி.

கேள்வி: கேஷ் மெமரி எனத் தனியே எதனைக் குறிப்பிடுகிறார்கள்? இதனால் என்ன பயன்?

பதில்: சில குறிப்பிட்ட பைல்களை அல்லது புரோகிராம்களை நீங்கள் தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்தி வந்தீர்களானால் கம்ப்யூட்டர் அதனைப் புரிந்து கொண்டு அவற்றை தற்காலிகமாகச் சேமித்து வைக்கிறது. இவையே கேஷ் மெமரியாகும். இவை ராம் மெமரியிலோ அல்லது ஹார்ட் டிரைவிலோ எழுதப்படலாம். இதனால் என்ன பயன்? அடிக்கடி பயன்படுத்தப்படும் தகவல்கள் என்பதால் கேஷ் மெமரியில் இவ்வாறு சேமித்து வைக்கப்படும் பைல்களை கம்ப்யூட்டர் இயக்குபவர் எளிதாகவும் வேகமாகவும் எடுத்துப் பயன்படுத்த முடிகிறது. ஹார்ட் டிஸ்க்கின் டிரைவைத் தேடி ஒவ்வொரு முறையும் சுழல வேண்டியதில்லை. இதனால் கம்ப்யூட்டர் செயல்படும் வேகமும் கூடுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s