கணினி கேள்வி-பதில் (29.03.2010)

கேள்வி: பிரின்ட் பிரிவியூவில் நாம் அச்சில் எடுக்கப்போகும் டாகுமென்ட் அல்லது வேறு பைல் தெரிகிறது. அப்படியானால் பைல் பிரிவியூ என்பது என்ன? இதனை எந்த மெனுவில் பெறலாம்? “
 

பதில்: File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைத்தானே பார்க்கிறீர்கள். இப்போது அந்த விண்டோவின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views  என்று ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும். இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப்படுவதனைப் பார்க்கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும். வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப்படும். இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக் குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம். இதுதான் பைல் பிரிவியூ. இந்த பைல் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம்.இதன் மூலம் நாம் பெயர் மறந்த பைல்களைத் தேடுவது எளிதாகும். ஒரு சிலர் பைலின் முதல் பக்கத்தில் இப்படித்தான் எழுதி இருந்தேன். அந்த பைல் வேண்டும் எனத் தேடுவார்கள். அவர்களுக்கு இந்த பைல் பிரிவியூ வழி கொடுக்கும்.

கேள்வி: என்னுடைய பாஸ்வேர்ட் ஸ்ட்ராங்கானது என்று எப்படி நம்புவது? ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொல்கிறார்கள்.. 
 

பதில்: நல்ல கேள்வி. அடுத்தவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு மாதிரியான பதிலைத்தான் சொல்வார்கள். மைக்ரோசாப்ட் உங்கள் உதவிக்கு இதில் வரும். உங்கள் பாஸ்வேர்ட் எந்த அளவில் ஸ்ட்ராங்கானது என்று அறிய வேண்டுமா? மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சேவையினை வழங்குகிறது. இதில் பாஸ்வேர்டினைத் தந்தால் அது ஹைஜாக் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக எந்த அளவிற்கு ஸ்ட்ராங்கானது என்று காட்டுகிறது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://www.microsoft.com/pro tect/yourself/password/checker.mspx.

கேள்வி: நீங்கள் அவ்வப்போது Alt  கீயுடன் சில எண்களை அழுத்தினால் கிடைக்கும் சில சிறப்பு குறீயீடுகள் குறித்து தகவல்களை அளித்துள்ளீர்கள். இவற்றை நினைவில் வைப்பது சிரமமாக உள்ளது. மேலும் அச்செடுத்து பட்டியலிட்டாலும் நாம் எதிர்பார்க்கும் குறியீடுகள் கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் பெற என்ன வழி உள்ளது?
 
பதில்:
சிரமம் தான். எண்களையும் அதற்கான குறியீடுகளையும் நினைவில் வைப்பது சிரமம்தான். அதனால் தானே இன்டர்நெட் முகவரிகள் எண்களில் இருந்தாலும், நாம் சொற்களில் அவற்றை நினைவில் கொள்கிறோம். இங்கு அந்த வசதியும் இல்லை. ஆனால் இன்டர்நெட்டில் ஒரு தளம் உள்ளது. அங்கு இந்த ஆல்ட் கீயுடன் இணைத்து எண்களைத் தந்தால் என்ன என்ன குறியீடுகள் கிடைக்கும் என்ற அனைத்து தகவல்களும் தரப்பட்டுள்ளன. அந்த தளத்தின் முகவரி : http://www.tedmontgomery.com/tutorial/altchrc.html

கேள்வி: என்னுடைய டாஸ்க்பாரில் இருந்த ÷ஷாடெஸ்க்டாப் ஐகான் திடீரென மறைந்து போய்விட்டது. இதனை எப்படி கொண்டுவருவது என்று தெரியவில்லை. புரோகிராம் பைல் சென்று மெனு வாங்கி கிரியேட் ஷார்ட் கட் ஏற்படுத்தலாம் என்றால், எந்த புரோகிராம் தேர்ந்தெடுப்பது என்றும் தெரியவில்லை. வழி காட்டவும்.
 

பதில்: இது போல பல வாசகர்கள் எழுதி உள்ளனர். என் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் மையத்தில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டு என்னிடம் விளக்கம் கேட்டனர். ÷ஷா டெஸ்க் டாப் என்பது மற்றவற்றைப் போல ஒரு வழக்கமான புரோகிராம் அல்ல. எனவே அந்த புரோகிராம் டேப் பெற்று, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் ஷார்ட் கட் எல்லாம் அமைக்க முடியாது. இதனைப் பெற நோட்பேடில் ஒரு சிறிய புரோகிராம் எழுதி, எங்கு இந்த ஐகான் இருக்க வேண்டுமோ அதற்கான போல்டரில் வைக்க வேண்டும். புரோகிராம் அமைக்கும் வழி பார்ப்போம். நோட்பேடைத் திறந்து கொள்ளுங்கள். இதற்கு Start  பட்டன் அழுத்தி Run  பாக்ஸில் notepad  என டைப் செய்திடலாம். நோட்பேட் புரோகிராம் கிடைத்தவுடன் அதில் கீழே குறித்துள்ளபடி டைப் செய்திடவும்.
[Shell]

அடுத்து இந்த பைலை savedesktop.scf என்ற பெயரில் சேவ் செய்திடவும். உருவாக்கிய பைலை C:\Documents and Settings\username\Application Data \Microsoft\Internet Explorer\Quick Launch என்ற போல்டரில் பேஸ்ட் செய்திடவும். இதில் username  என்பதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள யூசர் அக்கவுண்ட்டில் உள்ள யூசர் நேம் ஆக இருக்க வேண்டும். இனி ÷ஷா டெஸ்க்டாப் ஐகான் ஸ்டார்ட் பட்டனுக்கு அடுத்த இடத்தில் அமைந்திருப்பதனைக் காணலாம்.
உங்களுக்கு இந்த ஐகான் தான் வேண்டுமா? அல்லது டெஸ்க்டாப்பிற்குச் செல்வதற்கு எளிய வழி வேண்டுமா? விண்டோஸ் கீயுடன் D அல்லது M அழுத்தினால் விண்டோஸ் டெஸ்க் டாப் கிடைக்கும். மீண்டும் அதே கீகளை அழுத்த பழையபடி புரோகிராம்கள் இயங்கும் நிலையில் கிடைக்கும்.

கேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி பயன்டுத்துகிறேன். இதில் ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் என்ற பகுதியில் நான் பயன்படுத்திய லேட்டஸ்ட் பைல்கள் பட்டியலிடப்படுகின்றன. இவற்றில் மற்றவர்கள் பார்க்கக்கூடாத பைலை டெலீட் செய்தாலும் இதில் நிறைய பார்த்த பைல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இவற்றைத் தடை செய்திடும் வழி என்ன?
 

பதில்: மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் என்ற பிரிவில் எப்போதும் லேட்டஸ்ட்டாக நீங்கள் பார்த்த 15 பைல்கள் பட்டியலிடப்படும். இவற்றில் ஏதேனும் ஒரு பைலை நீக்க வேண்டும் எனில் அதில் ரைட் கிளிக் செய்து டெலீட் செய்திடலாம். ஆனாலும் இந்த பட்டியலில் உள்ள 15 பைல்கள் என்ற எண்ணிக்கை மாறாது. ஏனென்றால் இந்த பைல்களின் பெயர்கள் உங்களுடைய யூசர் புரபைல் (User Profile) என்னும் பகுதியில் ரீசண்ட் (Recent) என்ற பகுதியில் பதியப்பட்டிருக்கும். இவற்றை முழுவதுமாக நீக்க செய்ய வேண்டிய செயல்பாடுகளைக் காணலாம். உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி என்பதால், நீங்கள் சில ஆப்ஷன்களை இதில் மேற்கொள்ளலாம். ஸ்டார்ட் (Start) பட்டன் அழுத்தி ப்ராப்பர்ட்டீஸ் (Properties) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மெனுவில் கஸ்டமைஸ் (Customize) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் அட்வான்ஸ்டு (Advanced) என்ற டேப்பில் பின்னர் கிளிக் செய்திடவும். இதில் கிளியர் லிஸ்ட் (Clear List)  என்று உள்ளதில் கிளிக் செய்தால், ரீசண்ட் (Recent)  என்னும் பிரிவில் பதியப்பட்டிருக்கும் பைல் பெயர்கள் எல்லாம் நீக்கப்படும். நீங்கள் பார்த்த பைல்கள் மற்றவர்களுக்குத் தெரியாது. இதே பிரிவில் ஸ்டார்ட் மெனுவில் இருந்து மை ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் (‘My Recent Documents’) என்ற பிரிவையும் மொத்தமாக நீக்கலாம்.‘List My Most Recently Opened Documents’  என்பதனை கிளியர் செய்தாலே போதும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s