கணினி கேள்வி-பதில் (05.04.2010)

கேள்வி: என் நண்பர் பல வேலைகளுக்கு ஷிப்ட் கீயைப் பயன்படுத்தி புதிய வகையில் மாற்றங்களை மேற்கொள்கிறார். இவற்றை எப்படி அறிவது?

பதில்: நண்பரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே. அது இன்னும் மனதில் நன்றாகப் பதியுமே. கீழே சில வழிகளைத் தந்துள்ளேன். உடனே கம்ப்யூட்டரில் செயல்படுத்திப் பார்க்கவும். அப்போதுதான் மனதில் நிற்கும்.
ஷிப்ட் கீயுடன் (Shift) சில செயல்பாடுகளை மேற்கொண்டால் அது கூடுதல் பயன்களைத் தரும். எடுத்துக் காட்டாகப் பைல் மெனு கிளிக் செய்தால் வழக்கம்போல சில செயல்பாடுகளுக்கான கட்டங்கள் பட்டியலிடப்படும். ஆனால் ஷிப்ட் கீயுடன் அதனைக் கிளிக் செய்தால் Close All, Save All, and Paste Picture என்ற கூடுதல் பயன்பாட்டுக் கட்டங்கள் கிடைக்கும். சில டூல் பட்டன்கள் ஷிப்ட் கீயுடன் இணையும் போது அதன் செயல்பாடுகள் மாறுதலாக இருக்கும். எடுத்துக் காட்டாக எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிடும் அன்டர்லைன் பட்டன் டபுள் அன்டர்லைன் கோடு தரும் பட்டனாக மாறும். Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தை மீண்டும் ஆக்டிவேட் செய்திடும் சூழ்நிலை வருகையில், அதனைத் தவிர்க்கவே முடியாதா? தவிர்க்கும் வழிகள் உள்ளனவா? ஏனென்றால் ஒவ்வொரு முறை அனைத்தையும் மீண்டும் இன்ஸ்டால் செய்வதற்கான சிடிக்களைத் தேடுவதும், இன்ஸ்டால் செய்வதும் அதிக நேரம் எடுக்கும் வேலையாக உள்ளது?


பதில்:
உங்களுடைய கடிதத்தில் உள்ள ஆதங்கம் புரிகிறது. ஆனால் வேறு வழியில்லை. பல காரணங்களால் நாம் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை கம்ப்யூட்டரில் மீண்டும் ஆக்டிவேட் செய்திடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறோம். புதிய மதர்போர்டு இணைக்கையில், புதிய ஹார்ட் டிரைவுக்கு மாறுகையில், தொடர்ந்து சிஸ்டம் எர்ரர்கள் ஏற்படுகையில், நீங்களாகவே புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்க வேண்டும் என்று திட்டமிடுகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நாம் மீண்டும் ஒருமுறை செயல்படுத்த வேண்டியுள்ளது. அப்போது நீங்கள் கூறியுள்ள அனைத்து டிரைவர் இன்ஸ்டலேஷன் மற்றும் சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஆக்டிவேட் செய்கையில் இரண்டாவதாக நீங்கள் சொன்ன பல்வேறு இன்ஸ்டலேஷன்களை வேண்டுமானால் எளிதாக மேற்கொள்ள ஒரு வழி உள்ளது. முதல் முதல் நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியினை ஆக்டிவேட் செய்திடுகையில், சிஸ்டம் wpa.dbl என்ற ஒரு பைலை உருவாக்கியிருக்கும். இது WINDOWS\ system32 folder என்ற போல்டரில் இருக்கும். மை கம்ப்யூட்டரில் சி டிரைவ் சென்று இந்த போல்டருக்குச் செல்லவும். பின் கீழாக ஸ்குரோல் செய்து போனால், இந்த பைலைக் காணலாம். இதனை பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து வைக்கவும்.
அடுத்து விண்டோஸ் எக்ஸ்பியை ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் ஆக்டிவேஷன் ஸ்கிரீன் கிடைக்கும். அப்போது ஆக்டிவேட் செய்திடாமல், இன்ஸ்டலேஷனை மட்டும் முடிக்கவும். அடுத்து உங்கள் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கவும். ஸ்டார்ட் அப் ஆகும்போது எப்8 கீயை தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தினால், இந்த மோட் கிடைக்கும்.
அடுத்து WINDOWS\system32 folder செல்லவும். ஏற்கனவே காப்பி செய்து வைத்திருக்கும் wpa.dbl என்ற பைலை இதில் காப்பி செய்திடவும். பின் ரீபூட் செய்திடவும். எக்ஸ்பி இயங்க ஆரம்பித்து வழக்கம்போல அனைத்து சாப்ட்வேர் தொகுப்பு களையும் உங்களுக்குத் தந்துவிடும்.இதில் ஒரு சிறு எச்சரிக்கை தர விரும்புகிறேன். உங்களுடைய கம்ப்யூட்டரில் இருக்கும் பைல், மற்ற கம்ப்யூட்டர்களில் செயல்படாது.

கேள்வி: ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படுகிறேன். பல ஆங்கிலக் கட்டுரைகளில் படிக்கிறேன். இது எதனைக் குறிக்கிறது?


பதில்:
சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார். விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர், சர்வீஸ் பேக், லேட்டஸ்ட்டாக வந்த ஹாட் பிக்ஸ், அண்மையில் வந்த டிரைவர் தொகுப்புகள். என கணக்கிலடங்காத பின்னூட்டுகளை சிரமப்பட்டுத் தேடி இன்ஸ்டால் செய்திட வேண்டி இருக்கும். இல்லையேல் உங்கள் புரோகிராம்கள் இயங்காது. விண்டோஸ் முன்பு போலக் காட்சி அளிக்காது.
ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது இந்த அலைச்சலுக்கும் தேடலுக்கும் ஒரு முடிவு கட்டுகிறது. ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது ஒரு பூட்டபிள் சிடியில், நமக்குத் தேவையான லேட்டஸ்ட் டிரைவர் தொகுப்புகள், முழுமையான ஒரிஜினல் இன்ஸ்டலேஷன் பைல்கள், அப்போதைய சர்வீஸ் பேக் என அனைத்தையும் பதிந்து வைக்கும் செயல்பாடாகும். இந்த சிடியை வைத்துக் கொண்டால், விண்டோஸ் சிஸ்டம் தொகுப்பை ரீ இண்ஸ்டால் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் தானே மேற்கொண்டு விடும். இதனை எப்படி தயாரிப்பது?
இதற்கு முதலில் நமக்குத் தேவை விண்டோஸ் ஒரிஜினல் சிடி. இதனை முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் சி (C:/XP) டிரைவில் காப்பி செய்திடவும். உங்களுடைய சிஸ்டம் டிஸ்க்கில் லேட்டஸ்ட் சர்வீஸ் காப்பி இருந்தால் நல்லது. இல்லையேல் மைக்ரோசாப்ட் தளம் சென்று அதனையும் காப்பி செய்து அந்த டிரைவில் தனியான போல்டரில்பேஸ்ட் செய்திடவும். மைக்ரோசாப்ட் தளத்தில் என்ன என்ன ஹாட் பிக்ஸ் பைல்கள் கிடைக்கின்றனவோ, அவை அனைத்தையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும்.
விண்டோஸ் சிஸ்டம் சிடியில் இல்லாத டிரைவர்கள் ஏதேனும் உங்களுக்குத் தேவை என்றால், அவற்றின் தளங்களுக்குச் சென்று அவற்றையும் இதே போல அந்த இரண்டாவது போல்டரில் காப்பி/பேஸ்ட் செய்திடவும். இப்போது ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செயல்பாடு இந்த இரண்டு போல்டரையும் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் மூலம் உருவாக்குவதன் மூலம் இணைக்கும். இதற்கு உதவக் கூடிய புரோகிராம் ஆட்டோ ஸ்ட்ரீமர் (AutoStreamer 1.0.33) என்பதாகும். இதனை http://www.neowin.net/search/ news?terms=autostream என்ற தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம். இதனை டவுண்லோட் செய்து ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செய்திடப் பயன்படுத்தவும். இந்த வேலைகளை எல்லாம் மேற்கொள்ள சிறிது சிரமம் என்றாலும், விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமாக மேற்கொள்ளலாமே.

கேள்வி: ஒரு பைல் டைரக்டரியில் வரிசையாக இல்லாத ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை எப்படி ஸிப் பைலாக்குவது?

பதில்:
உங்களுடைய கடிதத்தில் இமெயிலில் அனுப்ப பைல்களை சுருக்க வேண்டும் என எழுதி உள்ளீர்கள். பைல்கள் உள்ள டைரக்டரி அல்லது போல்டருக்குச் செல்லுங்கள். கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, சுருக்க வேண்டிய பைல்கள் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுங்கள். ஸிப் செய்திட வேண்டிய அனைத்து பைல்களையும் தேர்ந்தெடுத்த பின்னர், இந்த பைல்களில் ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Send to என உள்ளதைக் கிளிக் செய்திடவும். அதன் பின் Compressed (zipped) folder என்பதைத் தேர்ந்தெடுக் கவும். மந்திரம் போட்டது போல, நீங்கள் தேர்ந்தெடுத்த பைல்கள் அனைத்தும் சுருக்கப்பட்டு, ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கும். விண்டோஸ் சிஸ்டம் இந்த ஸிப் பைலுக்குக் கொடுத்த பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பைலை செலக்ட் செய்து, எப்2 அழுத்தி, அதற்கு வேறு ஒரு பெயர் கொடுக்கவும்.
மேலே சொன்னது விண்டோஸ் சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள ஸிப் செய்திடும் வசதி. இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், விண் ஸிப் அல்லது விண் ஆர் ஏ ஆர் என்ற தர்ட் பார்ட்டி புரோகிராம்களை இலவசமாய் டவுண்லோட் செய்து இயக்கலாம். இந்த புரோகிராம்களில் இன்னும் பல ஆப்ஷன்கள் கிடைக்கும்.

கேள்வி: என் விண்டோஸ் போல்டரில் ‘$NtUninstallQ’’ என்று தொடங்கும் எக்கச் சக்க பைல்கள் உள்ளன. இவற்றை அழிக்கலாமா? அதனால் பிரச்னை வராதா?


பதில்:
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்களுக்கு வரும் ஒரு கூடுதல் தலைவலி. நீங்கள் ஒரு அப்டேட் அல்லது பேட்ச் பைல் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அல்லது விண்டோஸ் தானாக இன்ஸ்டால் செய்கையில், விண்டோஸ், ஒருவேளை பின் நாளில் இதனை அன்இன்ஸ்டால் செய்திட எண்ணினால் உதவட்டுமே என்ற நோக்கில், டைரக்டரி ஒன்றை உருவாக்கி பைல்களைப் போட்டு வைக்கிறது. இன்னொரு வழியில் சொல்வது என்றால், உங்களுடைய அப்டேட் பைல்கள், கம்ப்யூட்டரைக் கெடுத்துவிட்டால், தப்பிக்கும் வழியாக இது அமையும். இந்த பைல்கள் உங்களுக்கு வேண்டுமா? நிச்சயமாய் தேவைப்படாது. உங்கள் கடிதத்தில் உள்ள இந்த கேள்வியைப் படித்த பின் என் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் பார்த்தேன். 184 பைல்கள் 33 எம்பி இடத்தைப் பிடித்துக் கொண்டு இருந்தது. உடனே அவற்றை அழித்துவிட்டேன். ஆம், அழிக்கலாம். ஒன்றும் பிரச்னை இல்லை. நீக்கிய பின்னும், ஒவ்வொரு அப்டேட்டுக்குப் பின் இவை தோன்றும். தயக்கமில்லாமல் நீக்கிவிடலாம்.

Advertisements

2 thoughts on “கணினி கேள்வி-பதில் (05.04.2010)

  1. MHM NIMZATH

    நான் ஒரு பெறுமதி வாய்ந்த சீடி ஒன்றை வெளியிடவுள்ளேன் ஆனால் அதில் உள்ள பிரச்சினை என்னவென்றால்,அந்த சீடியை ஒருவர் என்னிடம்மிருந்து கொள்வனவு செய்து கொன்டு அவரும் அந்த சீடியை write பண்னி விற்கலாம் அல்லவா?ஆகவே என்னுடைய சீடியை மற்றவர்கள் write பண்னாமல் ஆக்குவதற்கு ஏதேனும் மென்பொருல் உண்டா?இருந்தால் தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்.

    1. sivacbe Post author

      தற்போது உள்ள நிலையில் யார் வேண்டுமானாலும் உணல் சிடி யை காப்பி செய்யலாம். தடுக்க இயலாது. நீங்கள் பாதுகாப்பு மென்பொருள் பதிந்தாலும் அதை பிரேக் செய்ய மென் பொருட்கள் வந்து கொண்டுதான் உள்ளது….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s