கணினி கேள்வி பதில்கள் (14.04.2010)

கேள்வி: ஏறத்தாழ பதினைந்து பாஸ்வேர்ட்களை நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் எவ்வளவோ மாற்றங்களைக் கொண்டு வரும் நாம், இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர முடியாதா?

பதில்:
ஏன் இல்லை? இனிமேல் இந்த பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இவை திருடப்படுமோ, காணாமல் (நம் நினைவைவிட்டு) போய்விடுமோ என்ற கவலையே கொள்ள வேண்டியதில்லை. உங்கள் கை விரல் ரேகையினை பாஸ்வேர்ட் ஆகக் கொண்டு, டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரில் உள்ள விரல் ரேகை ஸ்கேனர் மூலம் உருவாகும் விரல் ரேகைகளை பாஸ்வேர்டாகப் பயன்படுத்தலாம். அடுத்ததாக, கீ போட்டு பின் பாஸ்வேர்ட் போட்டு பயன்படுத்தும் வசதி உருவாகி உள்ளது. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் பிளாஷ் டிரைவ் போன்ற ஒரு சாதனம், அதற்கான தனி குறியீடுடன் கிடைக்கும். ஏதேனும் புரோகிராம் அதற்கான பாஸ்வேர்டைக் கேட்கையில், இந்த பிளாஷ் டிரைவினைச் செருகிப் பின் பாஸ்வேர்டை என்டர் செய்து பயன்படுத்த வேண்டும்.
இன்னொரு புதுவகை பாஸ்வேர்ட் பழக்கம் வர இருக்கிறது. தற்போது சில மொபைல் போன்களில் உள்ளதாக என் நண்பர்கள் கூறி உள்ளனர். ஒரு திரை உங்களுக்குக் காட்டப்படும். இதில் நீங்கள் பேட்டர்ன் அல்லது இமேஜ் ஒன்றை விரல்களால் வரைய வேண்டும். இது ஏற்கனவே சேவ் செய்யப்பட்ட இமேஜ் உடன் இணைந்து போனால், மொபைல் போனைப் பயன்படுத்தலாம். இல்லையேல் சிரமம் தான். மேலே சொன்ன அனைத்து வகை பாஸ்வேர்ட்களையும் வருங்காலக் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தக் கூடிய நாட்கள் அதிகம் இல்லை.

கேள்வி: கம்ப்யூட்டரில் உள்ள சில டாகுமெண்ட் பைல்களைத் திறந்து பார்க்க டிரைவிற்குச் சென்றால், டாகுமெண்ட் பெயருக்கு முன் டில்டே யுடன் ஒரு டாலர் (நு$) அடையாளம் உள்ளது. பைல் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் இடத்தில் இவை உள்ளன. இந்த பைல்கள் எதனைக் குறிக்கின்றன?

பதில்:
இது ஒரு தற்காலிக பைல்; நீங்கள் அந்த டாகுமெண்ட்டைப் பார்க்கையில் இது மறைத்து வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் டைப் செய்தவை எல்லாம் சேவ் செய்யப்படுவதற்கு முன், இந்த பைலில் தான் வைக்கப்படும். சில வேளைகளில் இந்த பைல் சிஸ்டத்திலேயே சில காலம் தங்கி இருக்கும். அல்லது நீங்கள் டாகுமெண்ட்டில் எடிட் செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் கிராஷ் ஆனால், இந்த பைல் அப்படியே இருக்கும். ஒரிஜினல் பைலும் இருக்கும். இந்த தற்காலிக பைலை, அதற்கான ஒரிஜினல் பைலை சேவ் செய்து மூடிய நிலையில் அழித்துவிடலாம்.

கேள்வி: பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் காட்சி காட்டிக் கொண்டிருக்கையில், ரைட் மவுஸ் பட்டனில் தவறுதலாக அழுத்திவிட்டால், தேவையில்லாமல் மெனு காட்டப்படுகிறது. இதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வழி உள்ளதா?

பதில்: இது போன்று பல வேளைகளில் நானும் சிந்தித்துள்ளேன். நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் காட்சி விளக்கத்தில் இது போல மெனுக்கள் தோன்றி நம் உற்சாகத்தைக் கெடுக்கும். ஆனால் இதற்கு ஒரு தீர்வு உள்ளது. இந்த மெனு தோன்றுவதை நிறுத்தி வைக்கலாம். Tools மெனு செல்லவும். அதில் Options என்ற சாய்ஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் விண்டோவில் View என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் Slide show பிரிவிற்குச் செல்லவும். இங்கு ‘Popup menu on right mouse click’ என்ற ஆப்ஷன் கிடைக்கும். இங்கு உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி ரைட் கிளிக் செய்தாலும் மெனு கிடைக்காது. மீண்டும் தேவைப்படும்போது டிக் அடையாளத்தை அமைக்கவும்.
உங்களிடம் பவர்பாய்ண்ட் 2007 இருந்தால், ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்து, பவர்பாய்ண்ட் ஆப்ஷன்ஸ் (Powerpoint Options) என்னும் பட்டன் மீது தட்டவும். இங்கு கிடைக்கும் பிரிவுகளில் அட்வான்ஸ்டு (Advanced) என்ற கேடகிரியைப் பெறவும். இதில் ஸ்லைட் ÷ஷா என்னும் பிரிவு கிடைக்கும். இங்கு ‘Show menu on right mouse click’ என்ற ஆப்ஷன் இருக்கும். இதில் மேலே சொன்னபடி டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி உங்களை எரிச்சலடையச் செய்திடும் மெனு வராது.

\கேள்வி: என் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அதிக தகவல்கள் உள்ளன. இதனால் பிரிண்ட் எடுக்கையில் தகவல்கள் பிரித்து கிடைக்கின்றன. எனக்கு அத்தகவல்கள் மேற்புறம், பின் அதன் கீழ் உள்ளது என்ற வரிசையில் வேண்டும். வலது பக்கம் உள்ளது இறுதியில்தான் வேண்டும். இதனை செட் செய்திட முடியுமா?

பதில்: பல பக்கங்களை உடைய எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். இப்போது அவற்றை பிரிண்ட் எடுக்க வேண்டும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஒரு வரிசையில் மட்டுமே எடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். அவ்வாறு உங்கள் விருப்பப்படி அச்சடிக்க முடியுமா?
எக்ஸெல் தொகுப்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும் அச்சடிக்க வழி தருகிறது. நீங்கள் ஒர்க்ஷீட்டில் தந்துள்ள தகவல்கள் ஒரு பக்கத்தில் அச்சடிக்கும் வகையில் இல்லாமல் இருந்தால் எக்ஸெல் அதில் உள்ள தகவல்களை, நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசை எல்லைகளில் பிரித்து வைத்து, அடுத்த பக்கங்களாக அச்சிடுகிறது. இந்த வரிசையினை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, உங்கள் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்கள் அதிக அகலத்திலும், அதிக உயரத்திலும் அமைந்திருப் பதாக வைத்துக் கொள்வோம். பிரிண்ட் ஆகும்போது இது நான்கு பக்கங்களில் அமையலாம். முதல் பக்கத்தில் அச்சிடப் படுவது எப்போதும் இடது பக்கத்தில் மேல் மூலையில் உள்ள செல்லாக இருக்கும். இப்போது நம் பிரச்னை, இரண்டாவது பக்கத்தில், கீழாக உள்ள தகவல்கள் பிரிண்ட் ஆகுமா? அல்லது வலது பக்கம் உள்ள கூடுதல் தகவல்கள் பிரிண்ட் ஆகுமா? என்பதுதான். இதனை நீங்கள் முடிவு செய்திடலாம்.
1. Page Setup பிரிவினை File மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.இப்போது எக்ஸெல் Page Setup டயலாக் பாக்ஸைத் தரும்.
2. இதில் Sheet டேப் தேர்ந்தெடுங்கள்.
3. இதில் Page Orderஎன்னும் பிரிவில், எக்ஸெல் எந்த வரிசையில் தகவல்களை அச்சடிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். நீங்கள் இதில் உங்கள் விருப்பத்தினை அமைக்கையிலேயே, எக்ஸெல் உங்கள் பிரிண்டிங் எந்த வகையில் அமைந்திடும் எனக் காட்டும்.
4. விருப்பங்களை அமைத்த பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இனி நீங்கள் செட் செய்தபடி பிரிண்ட் கிடைக்கும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கையில், ஒர்க் ஷீட்டின் செல் அகலம் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. என்னுடைய வேலைக்கு இவை சிறியதாக உள்ளன. எப்போது ஒரு ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும், இந்த அகலம் நான் விரும்பும் வகையில் அமைய வேண்டும். எப்படி இதனை செட் செய்வது?

பதில்: புதிய ஒர்க் ஷீட் ஒன்றைத் திறக்கையில் செல் அகலம் ஒரே மாதிரியான அளவிலேயே இருக்கும். இதனை உங்கள் விருப்பப்படி மாற்ற Format மெனு சென்று இணிடூதட்ண என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு துணை மெனுவினைக் காட்டும். இதில் Standard என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Standard Width என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் எந்த அகலத்தில் செல்கள் அமைய வேண்டுமோ அதனை அமைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இவ்வாறு செய்தவுடன் உங்கள் ஒர்க் ஷீட்டின் செல்கள் அனைத்தும் நீங்கள் குறிப்பிட்ட அளவிற்கு அட்ஜஸ்ட் செய்யப்படும். ஆனால் இதற்கு முன் நீங்கள் ஏதேனும் ஒரு செல்லின் அகலத்தினை நீங்களாக மாற்றி வைத்திருந்தால், அது அப்படியே அதே அகலத்தில் இருக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s