கணினி கேள்வி பதில்கள் (30.04.2010)

கேள்வி: கம்ப்யூட்டரில் புதிய சாப்ட்வேர் பதிந்ததனால் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டது. அதனை முழுமையாக நீக்கவும் முடியவில்லை. எப்படி இதனை முன்பிருந்த நிலைக்குக் கொண்டு செல்வது?

பதில்:
இந்த செயலை மேற்கொள்ளத்தான் விண்டோஸ் சிஸ்டத்தில் ரெஸ்டோர் (Restore) என்னும் வசதி உள்ளது. இதனைப் பயன்படுத்த நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக் இன் செய்திட வேண்டும். உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் ஒருவர் மட்டுமே பயன்படுத்தும்படி செட் செய்திருந்தால் இது பற்றிக் கவலைப் பட வேண்டாம்.
பின்பு Start > All programs> Accessories> System Tools> System Restore எனச் செல்லவும். இப்போது ‘Welcome to System Restore’ என்ற ஒரு திரை உங்களுக்குக் காட்டப்படும். இதன் இடது பக்கம் உள்ள உதவிக் குறிப்புகளைப் படிக்கவும். அடுத்து ‘Select a Restore Point’ என்ற பக்கத்தில் date option என்பதில் எந்த நாட்களில் இருந்த நிலைக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்லலாம் என்று காட்டப்படும். இதில் நீங்கள் இந்த செயலை மேற்கொள்ளும் நாளுக்கு மிக அருகே உள்ள ஒரு நாளைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Next பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து ‘Confirm Restore Point Selection’ என்ற ஒரு திரை காட்டப்பட்டு உங்களை உறுதிப்படுத்த கேட்டுக் கொள்ளும். அடுத்து உங்கள் கம்ப்யூட்டர் நீங்கள் தேர்ந்தெடுத்த நாளில் இருந்த செட்டிங்ஸ் அமைப்புகளுக்கு தன்னை மாற்றிக் கொள்ளும். அந்த நாளுக்குப் பின், நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம்களின் சுவடு எதுவும் இருக்காது. அடுத்து ‘Restoration Complete’ என்ற செய்தி உங்களுக்குக் காட்டப்படும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறி கம்ப்யூட்டரை இயக்கவும்.

கேள்வி: வேர்டில் நாம் எடுத்துக் காட்ட விரும்பும் சொற்களை ஹைலைட் செய்வது எப்படி?

பதில்:
வேர்டில் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். மேலே உள்ள மெனு பாரில் ab என்ற சிறிய எழுத்துக்களுடன் ஒரு கட்டம் தென்படும். இதுதான் ஹைலைட் செய்திடும் டூல். இதன் ஓரத்தில் ஒரு சிறிய தலைகீழ் அம்புக் குறி இருக்கும். இதில் கிளிக் செய்தால், எந்த வண்ணத்தில் ஹைலைட் செய்திட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். பின் இதில் கிளிக் செய்தால் ஹைலைட்டர் பேனா போன்ற ஒரு கர்சர் கிடைக்கும். வழக்கமான கர்சரும் அதன் இடத்தில் இருக்கும். இந்த ஹைலைட் கர்சரைக் கொண்டு, எந்த சொற்களை ஹைலைட் செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அவை ஹைலைட் செய்யப்படும். இந்த ஹைலைட் டூலை ஆப் செய்திட, எஸ்கேப் கீ அழுத்தலாம். அல்லது ab கட்டத்தில் மீண்டும் கிளிக் செய்திடலாம்.
ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் திரையில் தோன்றும் காட்சியில் மட்டும் இருக்காது. இந்த டாகுமெண்ட்டை அச்சடிக்கக் கொடுத்தால், உங்களிடம் கலர் பிரிண்டர் இருந்தால், இதே கலரில் சொற்கள் ஹைலைட் செய்யப்பட்டு அச்சாகும். கருப்பு வண்ண பிரிண்டர் எனில், ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் கிரே கலரில் வெளிறிப் போய் இருக்கும். எனவே நீங்கள் கருப்பு வெள்ளை பிரிண்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த ஹைலைட் செய்த பகுதிகளை நீக்கிவிடுவது நல்லது. இதற்கு ஹைலைட் செய்த பகுதியைத் தேர்ந்தெடுத்து, முன்பு சொல்லப்பட்ட அந்த ab கட்டத்தில் கிளிக் செய்தால் போதும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் சில சொற்களுக்கு அதே பொருள் கொடுக்கும்  Synonyms கிடைக்கவில்லை. இல்லை என்று காட்டுகிறது. அல்லது காட்டாமல் இருக்கிறது. இது எதனால்? இந்தக் குறையை எப்படி நீக்குவது? வேர்ட் பேக்கேஜை மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா?

பதில்
: வேர்ட் தொகுப்பில் ஆங்கிலத்தில் டாகுமெண்ட் அமைக்கையில் நமக்குத் தரப்படும் ரைட்டிங் டூல்கள் ஸ்பெல் செக்கர் என்னும் எழுத்துப்பிழை திருத்தி, கிராமர் செக்கர் என்னும் இலக்கணப்பிழை காட்டி மற்றும் அதே பொருள் கொண்ட சொற்களைக் காட்டும் தெசாரஸ் ஆகியவை ஆகும். ஒரு சொல்லின் மீது ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில்,  Synonyms என்ற பிரிவின் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், அந்த சொல்லுக்கான பொருள் கொண்ட மற்ற சொற்கள் பட்டியலிடப்படும். அதிலிருந்து நாம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வசதி சில நேரங்களில் கிடைக்காது. அதே பொருள் தரும் சொல் அதாவது Synonym இல்லை என்றால், கட்டம் காலியாக இருக்கும். அல்லது Thesaurus என்பது காட்டப்பட்டு அதில் கிளிக் செய்து வரும் கட்டத்தில் வேறு சொல் இல்லை என்ற செய்தி காட்டப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் சொல் புல்லட் அல்லது நம்பர் லிஸ்ட்டில் இருந்தால் Synonym காட்டப்படமாட்டாது. சொல் எழுத்துப் பிழை அல்லது இலக்கணப் பிழையின் ஒரு பகுதியாக இருந்தால் கிடைக்காது. அல்லது ஹைப்பர் லிங்க் அமைப்பில் இருந்தாலும் கிடைக்காது.

கேள்வி: இணையப் பக்கங்களிலிருந்து டெக்ஸ்ட் காப்பி செய்து வேர்டில் டாகுமெண்ட்டாக மாற்றுவதற்கு பேஸ்ட் செய்தால், வெப் பார்மட்டிங் செய்தது மற்றும் லிங்க்குகள் எல்லாம் இடம் பெறுகின்றன. இவை இல்லாமல் காப்பி செய்வது எப்படி?

பதில்:
எப்படி பேஸ்ட் செய்திடலாம் என்று சொல்கிறேன். முதலில் தேவையான வெப் பக்கத்தினை அல்லது டெக்ஸ்ட்டை காப்பி செய்திடுங்கள். பின் நோட்பேடினைத் திறந்து அதில் பேஸ்ட் செய்திடுங்கள். அப்போது நோட் பேட் அனைத்து பார்மட்டிங் மற்றும் லிங்குகளை நீக்கிடும். பின் இதனை காப்பி செய்து, வேர்ட் டாகுமெண்ட்டில் பேஸ்ட் செய்திடவும். இன்னொரு வழியும் உள்ளது. இன்டர்நெட் பக்கத்திலிருந்து டெக்ஸ்ட்டை அப்படியே காப்பி செய்து வேர்டில் பேஸ்ட் செய்திடவும். பின்னர் அதனை செலக்ட் செய்திடுங்கள். அடுத்து கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் அழுத்தவும். அனைத்து டெக்ஸ்ட் பார்மட்டிங் அகற்றப்படும். ஹைப்பர் லிங்க்குகளை நீக்க கண்ட்ரோல்+ஷிப்ட்+ எப்9 அழுத்தவும்.

கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் ஸிப் பைல்கள் எல்லாம் போல்டர்களாகக் காட்டப் படுகின்றன. இதனைத் தடுக்க முடியுமா?

பதில்
: தடுக்கலாம். ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில் ரன் பாக்ஸ் திறக்கவும். அதில் regsvr32 /u zipfldr.dll என டைப் செய்து என்டர் அழுத்தவும். உடன் dllunregisterserver in zipfldr.dll succeeded என்ற செய்தி கிடைக்கும். இனி நீங்கள் விரும்பியபடி போல்டர்களாகக் காட்டப்படாமல், பைல்களாகவே காட்டப்படும்.

கேள்வி: என் நண்பன் எனக்கு அனுப்பிய வேர்ட் டாகுமெண்ட்டில் பக்க எண் வழக்கம் போல் இல்லாமல், வேறு ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு வேர்ட் மூன்று சாய்ஸ் தான் கொடுக்கிறது. நண்பருக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது? மேலும் அதே டாகுமெண்ட்டில் அவர் அமைத்துள்ள கேப்பிடல் எழுத்துக்கள் வழக்கத்தைப் போல் அல்லாமல், சற்று அளவில் சிறியதாக அழகாக உள்ளது. இதனையும் விளக்கவும்.

பதில்:
பக்க எண்ணை வேர்ட் டாகுமெண்ட்டின் எந்த இடத்திலும் அமைக்கலாம். நீங்கள் எங்கு அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் ஆல்ட்+ஷிப்ட் + ப்பி (Alt + Shift + P) அழுத்தவும். உடனே பக்க எண் அந்த பக்கத்திற்கேற்ற வகையில் பதியப்படும்.
உங்களின் அடுத்த பிரச்னைக்கு வருவோம். உங்களைப் பொறுத்தவரை கேப்பிடல் லெட்டர்ஸும் வேண்டும்; ஆனால் இவ்வளவு பெரிய அளவில் இருக்கக்கூடாது. அப்படியானால் மீண்டும் இதனைத் தேர்ந்தெடுத்து எழுத்தின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு வர வேண்டும். எந்த அளவு உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அந்த அளவில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு இந்த தொல்லையை வழங்காமல் வேர்ட் ஒரு வழியைத் தந்துள்ளது. சொற்களைத் தேர்ந்தெடுத்து Ctrl + Shift + K என்ற கீகளை அழுத்துங்கள். காண்பதற்கு லட்சனமான அளவில் பெரிய எழுத்துக்களில் அந்த சொற்கள் கிடைக்கும். முதலில் மிகப் பெரிய கேப்பிடல் எழுத்துக்களை அமைத்துவிட்டுத்தான் பின் இதற்கு மாற வேண்டியதில்லை. சிறிய எழுத்துக்களில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து Ctrl + Shift + K கீகளை அழுத்தினாலே அவை சிறிய கேபிடல் லெட்டர்களில் அமையும்.

கேள்வி: நம் மின்னஞ்சல் முகவரிகளில் எண்களை இணைத்து அமைத்தால், நமக்கு தேவையற்ற குப்பை மெயில்கள் வருவதனைத் தடுக்கலாம் என்பது சரியா?

பதில்:
மின்னஞ்சலுக்கான யூசர் ஐடியில் எண்கள் இருப்பதனால், அதற்கு பாதுகாப்பு ஓரளவிற்கு உண்டு. ஸ்பேம் மெயில் எனப்படும் வர்த்தக மெயில்களை அனுப்புபவர்கள், இமெயில் முகவரி களைப் பெற பல வழிகளைக் கையாளுகின்றனர். எனவே எண்களினால் நாம் தப்பமுடியுமா என்பது சந்தேகமே. இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடுகையில் பல நிகழ்வுகளில் நம் இமெயில் முகவரிகளை என்டர் செய்கிறோம்.
இந்த தளங்கள் என்னதான் பெரிய சிறந்த கட்டுக் கோப்பான நிறுவனங்களின் தளங்களாக இருந்தாலும், எப்படியாவது அதன் தளங்களில் உள்ள முகவரிகள் வெளியே கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை இந்த ஸ்பேம்மர்கள் பெற்று மெயில்களை அனுப்பி சிக்க வைத்திட முயற்சிக்கின்றனர். தற்போது டிக்ஷனரி அட்டாக் என்று ஒரு வழியை மேற்கு நாடுகளில் கையாள்கின்றனர். மேற்கு நாடுகளில் முதல் மற்றும் இரண்டாவது பெயர் என ஒருவர் பெயரில் இரு சொற்களில் பெயர்கள் இருக்கும். இந்த இரண்டு பெயர்களில் என்னவெல்லாம் வரக் கூடும் என பட்டியலிட்டு அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து புகழ் பெற்ற இலவச இமெயில் தளங்களின் பெயர்களோடு சேர்த்து இமெயில்களை அனுப்பு கின்றனர். இப்படி எத்தனையோ வழிகள் இருப்பதால் எண்களை இணைப்பதால் மட்டும் நாம் இந்த நாச வலையிலிருந்து தப்புவோம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு வேளை சிறிது நாட்கள் தள்ளிப் போடலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s