திரையில் கீ போர்ட்

பல வேளைகளில் கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள கீ போர்டில் டைப் செய்வது ஆபத்தில் முடிகிறது. நீங்கள் என்ன டைப் செய்கிறீர்கள் என்பதனை, நீங்கள் அழுத்தும் கீகளை வரிசையாகப் பெற்று அறிவிக்கும் கீ லாக்கர்கள் புரோகிராம் கள், இணையத்தில் நிறைய கிடைக் கின்றன. இதனைக் கம்ப்யூட்டர்களில் பதிந்து வைத்தால், ஒருவர் டைப் செய்திடும் இமெயில் முகவரி, பாஸ்வேர்ட், வங்கி அக்கவுண்ட் தகவல்களைப் பெற்று, திருட்டுத் தனமாக அவற்றைப் பயன்படுத்த முடியும். மேலும் பல ஸ்பைவேர் புரோகிராம்கள் இது போல கீ போர்டில் அழுத்தப்படும் கீகளை அறியும் நோக்கத்துடனேயே தயார் செய்யப் பட்டு, நம்மை அறியாமலேயே நம் கம்ப்யூட்டர்களில் பதிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நம் தகவல்களை அந்த புரோகிராம்கள் அனுப்பி யவர்களின் கம்ப்யூட்டருக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. என்னதான் நாம் ஆண்ட்டி வைரஸ், பயர்வால், ஸ்பைவேர் புரோகிராம்களை பதித்து வைத்து இயக்கினாலும், அவற்றையும் மீறிக் கொண்டு இந்த ஸ்பைவேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டருக்குள் நுழைகின்றன.
இதனால் தான் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் ரகசிய தகவல்களைக் கையாளும் அமைப்புகள், தங்கள் தளங்களிலேயே விர்ச்சுவல் கீ போர்டு ஒன்றைத் திரையில் தருகின்றன. இந்த விர்ச்சுவல் கீ போர்டு மூலம் நம் யூசர் நேம், பாஸ்வேர்ட் மற்றும் பிறர் அறியக்கூடாத தகவல்களை டைப் செய்திடலாம். இவற்றின் மூலம் டைப் செய்திடுகையில், மேலே குறிப்பிட்ட ஸ்பைவேர் புரோகிராம்கள், கீ அழுத்தங்களைப் பின்பற்ற முடியாது.   அப்படி எனில், நமக்கு நிரந்தரமாக ஒரு விர்ச்சுவல் கீ போர்டினை வைத்துக் கொள்ள முடியுமா என்று நாம் எதிர்பார்க்கலாம்.  அப்படி ஒரு விர்ச்சுவல் கீ போர்ட், யூசர் ஸ்கிரிப்ட் விர்ச்சுவல் கீ போர்ட் (UserScript Virtual Keyboard) என்ற  பெயரில் கிடைக்கிறது. திரையில் வைத்து இதனை மிக வேகமாகவும் எளிதாகவும் இயக்க முடிகிறது. தற்போதைக்கு டெக்ஸ்ட் பீல்ட், பாஸ்வேர்ட் பீல்ட், சார்ந்த டெக்ஸ்ட் ஏரியா ஆகியவற்றில் இதன் மூலம் சொற்களை அமைக்க முடிகிறது. பிரவுசர்களில் முகவரிகளை இதனைக் கொண்டு அமைக்க முடியாது. இதனை பதிந்துவிட்டு, இணைய தளம் ஒன்றில் மேலே குறிப்பிட்ட பீல்டுகளில் கர்சரைக் கொண்டு சென்று மூன்று முறை கிளிக் செய்தால், இந்த விர்ச்சுவல் கீ  போர்டு கிடைக்கிறது.  டெக்ஸ்ட் பீல்டுக்குக் கீழாகவே இது காட்டப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி அல்லது ஜப்பானியர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு கீ போர்டுகளின் வடிவமைப்புகள் இதில் கிடைக்கின்றன. தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் இது இயங்குகிறது.    இதனைப் பெற http:/ userscripts.org/scripts/show/10974 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s