ஒரு நாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடியவர் தெண்டுல்கர்

ஒரு நாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடியவர் என்ற மகத்தான பெருமைக்கு சொந்தக்காரர் தெண்டுல்கர்.

சாதனை விவரங்கள்

சச்சின் தெண்டுல்கர் என்றால், சாதனை என்று இன்னொரு பொருளும் உண்டு என்று சொல்லும் அளவுக்கு கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். யாரிடம் இல்லாத ஒரு வசீகர ஆட்டம் தெண்டுல்கரிடம் உண்டு. அதனால் தான் என்னவோ கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரது ஆட்டத்திற்கு அடிமையாகி கிடந்தனர். அவர் ஆட்டம் இழந்து விட்டால் டி.வி.யை ‘ஆப்’ செய்து விடும் ரசிகர்களும் உண்டு.

கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு நேற்று திடீரென முழுக்கு போட்டுவிட்ட நிலையில், ஒரு நாள் போட்டியில் அவர் வசம் உள்ள சாதனை விவரங்களை இங்கே பார்க்கலாம். *அதிக ரன்கள் குவித்தவர்–18,426 ரன்(2–வது இடம் ஆஸ்திரேலியாவின் பாண்டிங்–13704 ரன்)

*அதிக ஒரு நாள் போட்டிகளில் ஆடியவர்–463 ஆட்டம் (2–வது இடம் இலங்கையின் ஜெயசூர்யா 445 ஆட்டம்)

*அதிக சதங்கள் விளாசியவர்–49 சதங்கள்(2–வது இடம் பாண்டிங்–30 சதம்)

*ஓர் ஆண்டில் அதிக ரன்கள் சேர்த்தவர்–1,894 ரன் (34 ஆட்டம், 1998–ம் ஆண்டு), 2–வது இடம் (கங்குலி–1,767 ரன் (41 ஆட்டம், 1999–ம் ஆண்டு)

*ஓர் ஆண்டில் அதிக சதங்களை பதிவு செய்தவர்–9 சதம் (1998–ம் ஆண்டு), 2–வதுஇடம் கங்குலி (7 சதம், 2000–ம் ஆண்டு)

*அதிக பவுண்டரிகள் அடித்தவர்–2016 பவுண்டரி (2–வது இடம் ஜெயசூர்யா–1500 பவுண்டரி)

*அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றவர்–62 முறை (2–வது இடம் ஜெயசூர்யா–48 முறை)

*அதிக தடவை தொடர்நாயகன் விருது வாங்கியவர்–15 முறை (2–வது இடம் ஜெயசூர்யா–11 தடவை).

நீண்ட கால ஆட்டம்

*ஒரு நாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடியவர்–22 ஆண்டுகள் 91 நாட்கள் (2–வது இடம் ஜெயசூர்யா–21 ஆண்டு 184 நாட்கள்)

*சவுரவ் கங்குலியுடன் சேர்ந்து தொடக்க ஜோடிக்கு அதிக ரன்கள் குவித்தவர். தெண்டுல்கர்–கங்குலி இணை தொடக்க விக்கெட்டுக்கு இதுவரை 6,609ரன்கள் (136 ரன்கள்) எடுத்துள்ளனர்.

*இரண்டு அணிகளுக்கு எதிராக 3 ஆயிரம் ரன்களுக்கு மேல் (ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிராக) குவித்த ஒரே வீரர்.

*ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர். *ஓர் விக்கெட்டுக்கு அதிகபட்ச ரன் எடுத்தவர்கள் தெண்டுல்கர்–டிராவிட் ஜோடி. 1999–ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 2–வது விக்கெட்டுக்கு அவர்கள் இணைந்து 331 ரன்கள் குவித்தனர்.

உலக கோப்பையில்…

*ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர்–2278 ரன் (45 ஆட்டம்), 2–வது இடம் பாண்டிங்–1743 ரன் (46 ஆட்டம்).

*ஓர் உலக கோப்பையில் அதிக ரன்கள் திரட்டியவர்–673 ரன் (2003–ம் ஆண்டு உலக கோப்பை), 2–வது இடம் ஆஸ்திரேலியாவின் ஹைடன் (659 ரன், 2007–ம்ஆண்டு உலக கோப்பை). *உலக கோப்பையில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை பெற்றவர்–9 முறை (2–வது இடம், ஆஸ்திரேலியாவின் மெக்ராத்–6 தடவை).

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s