Tag Archives: அயர்லாந்து

உலக கோப்பை: பயிற்சி போட்டி நாளை ஆரம்பம்!

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் நாளை துவங்குகின்றன.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி துவங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கிறது. இதில், 14 அணிகள் பங்கேற்கின்றன. “ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யா அணிகள் இடம் பெற்றுள்ளன.
“பி’ பிரிவில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
இரண்டு போட்டிகள்:
இம்முறை போட்டிகள் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் உள்ள முக்கிய மைதானங்களில் நடைபெற உள்ளன. உலக கோப்பை தொடர் துவங்கும் முன், பயிற்சி போட்டிகள் நாளை முதல் ஆரம்பமாகின்றன. வரும் 18ம் தேதி வரை பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும். மொத்தம் 14 பயிற்சி ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்திய அணி, வரும் 13ம் தேதி பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுடனும், 16ம் தேதி சென்னையில் நியூசிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.
கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடக்கும் முதல் பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – கென்யா அணிகள் மோதுகின்றன.
சென்னையில் பயிற்சி:
இதற்கிடையே உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் தென்ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் சென்னை வந்துள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று காலை தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

இந்தியா பங்கேற்கும் போட்டிகள்:

உலக கோப்பை தொடரில் இம்முறை பயிற்சி மற்றும் லீக் சுற்றில் இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடக்க உள்ளன. இதன் விபரம்:
நாள்    அணிகள்    இடம்    நேரம்
பயிற்சி போட்டி:
பிப். 13    இந்தியா-ஆஸ்திரேலியா    பெங்களூரு    மதியம் 2.30 மணி
பிப். 16    இந்தியா-நியூசிலாந்து    சென்னை    மதியம் 2.30 மணி
உலக கோப்பை லீக் சுற்று
பிப். 19    இந்தியா-வங்கதேசம்    மிர்புர்    மதியம் 2 மணி
பிப். 27    இந்தியா-இங்கிலாந்து    பெங்களூரு    மதியம் 2.30 மணி
மார்ச் 6    இந்தியா-அயர்லாந்து    பெங்களூரு    மதியம் 2.30 மணி
மார்ச் 9    இந்தியா-நெதர்லாந்து    டில்லி    மதியம் 2.30 மணி
மார்ச் 12    இந்தியா-தென் ஆப்ரிக்கா    நாக்பூர்    மதியம் 2.30 மணி
மார்ச் 20    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்    சென்னை    மதியம் 2.30 மணி